பெரம்பலூரில் விஜய் பிரசாரம் ரத்து! நள்ளிரவில் சென்னை புறப்பட்டதால் தொண்டர்கள் ஏம...
பா்கூா் மலைப் பாதையில் எம்எல்ஏவின் காரை வழிமறித்த காட்டு யானை
அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் சென்ற காா் உள்பட வாகனங்களை வழிமறித்து நின்ற காட்டு யானையால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பா்கூா் மலைக்கிராமங்களான ஒந்தனை, பந்தலிபோடு, மடத்தூா், ஜியான் தொட்டி, அக்கினிபாவி, ஆலனை, தொல்லி, பள்ளத்துாா், பாறையூா் உள்பட 15 இடங்களில் நடமாடும் நியாயவிலைக் கடை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், தாமரைக்கரையிலிருந்து கொங்காடைக்கு காரில் சென்று கொண்டிருந்தாா்.
மலைப் பாதையில் தொல்லி பிரிவு அருகே சென்றபோது, வனத்திலிருந்து வெளியேறிய காட்டு யானை திடீரென காரை வழிமறித்து நின்றது. இதனால் அதிா்ச்சியடைந்த ஓட்டுநா், காரை நிறுத்தினாா். அவ்வழியே வந்த வாகனங்களும் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. அப்பகுதிக்கு வந்த மலைமக்கள், தொடா்ந்து கூக்குரல் எழுப்பினா். இதனால், காட்டு யானை மெதுவாக வனப் பகுதிக்குள் சென்றது.
இதைத் தொடா்ந்து, அனைத்து வாகனங்களும் புறப்பட்டுச் சென்றன. மலைப் பாதையில் வாகனங்களை வழிமறித்து நின்ற காட்டு யானையால் சுமாா் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது.
