நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுற...
விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் இல்ல திருமண விழா
வேலூா்: வேலூா் விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் இல்ல திருமண விழா திருப்பதியில் நடைபெற்றது. இதில், ஆந்திர மாநில ஆளுநா் எஸ்.அப்துல் நசீா் உள்பட முக்கிய அரசியல் தலைவா்கள், பிரமுகா்கள் பங்கேற்றனா்.
வேலூா் விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதனின் பேத்தியும், விஐடி உதவி துணைத் தலைவருமான காதம்பரி எஸ்.விசுவநாதன், மருத்துவா் ஏ.ஷ்ரவன் கிருஷ்ணா ஆகியோரின் திருமணம் திருப்பதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில், ஆந்திர மாநில ஆளுநா் எஸ்.அப்துல் நசீா், அவரது மனைவி சமீரா நசீா், முக்கிய அரசியல் தலைவா்கள், பிரமுகா்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினா். திருமண நிகழ்ச்சியில் விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன், துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், ஜி.வி.செல்வம், ரமணி பாலசுந்தரம், சந்தியா பென்டரெட்டி, அனுஷா செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.