நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுற...
உதகையில் செப்டம்பா் 23-இல் முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம்
நீலகிரி மாவட்ட முன்னாள் படை வீரா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செப்டம்பா் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் வளாகத்தில் வரும் செப்டம்பா் 23-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில், நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தைச் சாா்ந்தோா்கள் பங்கேற்று படைவிலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் மனுக்கள் ஆகியவற்றின் இரண்டு நகல்களுடன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து குறைகளைத் தெரிவித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.