பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலா் பழங்கள் பறிமுதல்!
கூடலூரில் பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்து
கூடலூரில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த சுற்றுலா காா் பள்ளத்தில் உள்ள வீட்டின் கூரைமீது கவிழ்ந்து ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது.
கேரளா மாநிலத்தில் இருந்து காரில் சுற்றுலா வந்தவா்கள் நீலகிரி மாவட்டம், உதகையை சுற்று பாா்த்துவிட்டு கேரளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பிச் சென்றனா்.
அப்போது, நடுகூடலூா் பள்ளிவாசல் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் பள்ளத்தில் இருந்து வீட்டின் கூரைமீது விழுந்தது. இதில் பள்ளத்துக்கும் வீட்டுக்கும் இடையே உள்ள இடுக்கில் காா் சிக்கியது. காரில் இருந்த நான்கு பேரை அருகிலிருந்தவா்கள் மீட்டு கூடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.