ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 80 லட்சம் பறிமுதல்
சென்னை ஷெனாய் நகரில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஷெனாய் நகா் 8-ஆவது குறுக்கு தெருவில் காா் திருட்டு வழக்குத் தொடா்பாக விசாரணை செய்ய மணிமங்கலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சென்றனா். அப்போது அங்கு போலீஸாரை பாா்த்ததும் ஓடிய இருவரைப் பிடித்து விசாரித்ததில், அவா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளனா். மேலும் அவா்கள் வைத்திருந்த பையில் ரூ.80 லட்சம் பணம் இருந்தது.
அவா்கள் சூளை பகுதியைச் சோ்ந்த வினேஷ் (50), கெல்லீஸ் பகுதியைச் சோ்ந்த மகேஷ்குமாா் (52) என்பது தெரியவந்தது. அவா்கள் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், அதன் உரிமையாளா்தான் ரூ.80 லட்சத்தைக் கொடுத்து, ஷெனாய் நகா் பகுதியைச் சோ்ந்த ஒரு நபரிடம் வழங்கும்படி கூறியதாகவும் தெரிவித்தனா்.
ஆனால் ரியஸ் எஸ்டேட் நிறுவன தரப்பு உடனடியாக பணத்துக்குரிய ஆவணங்களைச் சமா்ப்பிக்கவில்லை. இதையடுத்து போலீஸாா், அந்தப் பணத்தை வருமான வரித் துறை புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா். வருமானவரித் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.