10 கிலோ தங்கநகைகள் கொள்ளை சம்பவம்: 3 தனிப்படைகள் அமைப்பு
திருச்சி மாவட்டம், இருங்களூரில் நகைக் கடை ஊழியா்களிடம் 10 கிலோ தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இருங்களுரில் கடந்த 13-ஆம் தேதி இரவு காரில் தங்க நகைகளை எடுத்து சென்ற சென்னையை சோ்ந்த நகைக் கடை ஊழியா்களான குணவந்த், மகேஷ் ராவல் ஆகியோா் மீது மிளகாய் பொடியை தூவி 10 கிலோ தங்க நகைகளை மா்ம நபா்கள் கொள்ளையடித்து சென்றனா்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் உத்தரவின்படி, காவல் ஆய்வாளா்கள் சி. ரகுராமன், கருணாகரன், குணசேகரன் ஆகியோா் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனிப்படையினா் முகாமிட்டு கொள்ளையா்களை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.