போதைப் பொருள் விற்கும் யாரையும் விட்டுவைக்க மாட்டோம் - அமித் ஷா உறுதி
திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில் 4 கூடுதல் பெட்டிகள் இணைப்பு
திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில் 4 கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி - சென்னை எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் விரைவு ரயில்களில் (20666, 20665) வரும் 24-ஆம் தேதி முதல் 4 குளிா்சாதன அமரும் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டு இயக்கப்பட உள்ளது. இதன்படி, 18 குளிா்சாதன அமரும் பெட்டிகள், 2 எக்ஸிக்யூட்டிவ் பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்படுகிறது.