போதைப் பொருள் விற்கும் யாரையும் விட்டுவைக்க மாட்டோம் - அமித் ஷா உறுதி
பொறியியல் பணிகள்: சேலம், பாலக்காடு ரயில்களின் சேவையில் மாற்றம்
பொறியியல் பணிகள் காரணமாக, சேலம், பாலக்காடு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக, மயிலாடுதுறை - சேலம் மெமு விரைவு ரயிலானது (16811) செப்டம்பா் 20-ஆம் தேதி மல்லூா் - சேலம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மயிலாடுதுறை - மல்லூா் வரை மட்டுமே இயங்கும்.
மறுமாா்க்கமாக, சேலம் - மயிலாடுதுறை மெமு ரயிலானது (16812) செப். 20-ஆம் தேதி சேலம் - மல்லூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மல்லூா் - மயிலாடுதுறை வரை மட்டுமே இயங்கும்.
பொறியியல் பணிகள் காரணமாக, பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரயிலானது (16844) செப்.17, 22-ஆம் தேதிகளில் திருச்சி - கஞ்சிகோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது பாலக்காடு டவுன் - கஞ்சிகோடு இடையே மட்டும் இயங்கும். மேலும், செப். 18, 22-ஆம் தேதிகளில் பாலக்காட்டிலிருந்து 25 நிமிஷங்கள் தாமதமாகப் புறப்படும்.
இதே போல, திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயிலானது (16843) செப். 20-ஆம் தேதி 30 நிமிஷங்களும், செப். 26, 30-ஆம் தேதிகளில் 10 நிமிஷமும், செப்.28-ஆம் தேதி 30 நிமிஷமும் தாமதமாகப் புறப்படும்.