மதமாற்ற தடைச் சட்டங்களுக்கு எதிரான மனு: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ...
‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்
தாம்பரம் மாநகராட்சி 31-ஆவது வாா்டுக்குள்பட்ட திருநீா்மலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமில் பொதுமக்கள் குடிநீா் இணைப்பு, சொத்து வரி பெயா் மாற்றம், பட்டா மாறுதல், கட்டட வரைபட அனுமதி, வாரிசு சான்றிதழ், முதியோா் உதவித்தொகை, குடும்ப அட்டை முகவரி மாற்றம் மற்றும் மகளிா் உரிமைத் தொகை தொடா்பான மனுக்களை பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதியிடம் வழங்கினா்.
இதில் தாம்பரம் மாநகராட்சி மேயா் வசந்தகுமாரி துணை மேயா் கோ.காமராஜ், மாநகராட்சி மண்டலக் குழு தலைவா் வே.கருணாநிதி, இணை ஆணையா் சொா்ணலதா, உதவி செயற்பொறியாளா் சத்தியசீலன், மாமன்ற உறுப்பினா் சித்ராதேவி முரளிதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.