செய்திகள் :

இந்திய அணியின் நியூ ஸ்பான்சர் Apollo Tyres; ஒரு போட்டிக்கு ரூ.4.5 கோடி, முழு ஒப்பந்தத் தொகை எவ்வளவு?

post image

நாடாளுமன்றத்தில் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடைவிதிக்கும் ஆன்லைன் கேமிங் ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025, இரண்டே நாளில் நிறைவேற்றப்பட்டு, அடுத்த நாளே குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு சட்டமாக்கப்பட்டது.

திறன், வாய்ப்பு அல்லது இந்த இரண்டின் அடிப்படையிலான எந்தவொரு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கும் முற்றிலும் தடைவிதிப்பது இந்த சட்டத்தின் முக்கிய அம்சம்.

BCCI
BCCI

இதனால், ஆன்லைனில் பணம் கட்டி விளையாடும் செயலியான ட்ரீம் 11 (Dream 11), இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்திலிருந்து விலகியது.

அதனால் ஸ்பான்சர் இல்லாமலேயே ஆசிய கோப்பையில் இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்த நிலையில், இந்திய அணியின் புதிய ஸ்பான்சராக அபோல்லோ டயர்ஸ் (Apollo Tyres) நிறுவனம் ஒப்பந்தம் ஆகியிருக்கிறது.

இது குறித்து பி.சி.சி.ஐ (BCCI) தனது அறிக்கையில், "உலக அளவில் டயர் துறையில் முன்னணியில் இருக்கும் அப்பல்லோ டயர்ஸ், இந்திய அணியின் புதிய முன்னணி ஸ்பான்சராக பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது.

இது இந்திய கிரிக்கெட்டில் அப்பல்லோ டயர்ஸின் முதல் பயணத்தைக் குறிக்கிறது" என்று தெரிவித்திருக்கிறது.

மேலும், பி.சி.சி.ஐ இடைக்கால தலைவர் ராஜீவ் சுக்லா, "எங்களின் புதிய முன்னணி ஸ்பான்சராக அப்பல்லோ டயர்ஸை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

அபோல்லோ டயர்ஸ் (சித்தரிப்புப் படம்)
அபோல்லோ டயர்ஸ் (சித்தரிப்புப் படம்)

ஒப்பந்த மதிப்பு மற்றும் ஒரு போட்டிக்கான தொகை எவ்வளவு?

2028 மார்ச் வரையிலான இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.579 கோடி என கூறப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் இந்திய அணி இருதரப்பு தொடரில் 121 போட்டிகளிலும், ஐசிசி தொடரில் 21 போட்டிகளிலும் விளையாடவிருக்கிறது.

இதில், இருதரப்பு தொடரில் ஒரு போட்டிக்கு ரூ. 3.5 கோடியும், ஐ.சி.சி தொடரில் ஒரு போட்டிக்கு 1.5 கோடியும் பி.சி.சி.ஐ அடிப்படைத் தொகையாக நிர்ணயித்திருந்த இலையில், தற்போது புதிய ஸ்பான்சர் அபோல்லோ டயர்ஸ் நிறுவனமானது, இருதரப்பு தொடரில் ஒரு போட்டிக்கு ரூ. 4.5 கோடியும், ஐ.சி.சி தொடரில் ஒரு போட்டிக்கு 1.72 கோடியும் அளிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறது.

"தோனிதான் மோடியிடம் என்னை அறிமுகம் செய்தார்; அன்று அவர் கூறிய..." - முதல் சந்திப்பு குறித்து ஜடேஜா

இந்திய அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக ரவீந்திர ஜடேஜா ஆடி வருகிறார்.தற்போது இங்கிலாந்தில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியைத் தழுவாமல் தொடரை சமன் செய்ததில் ஜடேஜாவின் ஆட்டம் ... மேலும் பார்க்க

IND vs PAK: "அவ்வாறு சட்டம் ஒன்றும் இல்லை" - இந்திய வீரர்களின் செயலை நியாயப்படுத்தும் BCCI அதிகாரி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பைத் தொடரில் செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் வெற்றிபெற்ற பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்க மறுத்த சம... மேலும் பார்க்க

IND vs PAK: "இதற்காகத்தான் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுகிறது" - மத்திய அமைச்சர் ஓபன் டாக்

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் ஆடக்கூடாது என்று பல தரப்பிலிருந்து குரல்கள் எழுந்தன. இப்போதும் வந்து கொண்டிருக்கிறது.இத்தகைய சூழலில், ஐக்கிய அரபு அ... மேலும் பார்க்க

'இப்படி நடந்துப்பாங்கனு எதிர்ப்பார்க்கல'- கைக்குலுக்காத இந்திய வீரர்கள் குறித்து பாக் பயிற்சியாளர்

ஆசியக்கோப்பை இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் வெற்றிக்குப் பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் சென்ற சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என ஒ... மேலும் பார்க்க

``பண்புடன் நடந்துக்கொள்ள வேண்டும்'' - கைக்குலுக்க மறுத்த இந்திய வீரர்கள்; PCB தலைவர் மோசின் நக்வி

ஆசியக் கோப்பை இந்தியா–பாகிஸ்தான் போட்டியில் வெற்றிக்குப் பிறகு, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் சென்ற சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. “விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும்” ... மேலும் பார்க்க

Ind vs Pak: இறுக்கிப் பிடித்த இந்திய சுழல்; அதிரடி வெற்றி - கைகொடுக்காமல் சென்ற வீரர்கள்!

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆசிய கோப்பை 2025 லீக் போட்டி பெரும் பரபரப்புக்கு நடுவே நடந்துவருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த போட்டியில், டாஸ் போடப்பட்டபோது கேப்டன்கள் இருவரும் கைகுலுக்... மேலும் பார்க்க