செய்திகள் :

நெல்லை - தென்காசி ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்த வலியுறுத்தல்

post image

நெல்லை - தென்காசி வழித்தட ரயில்வே கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.

நெல்லை - தென்காசி வழித்தடத்தில் ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்த தெற்கு ரயில்வே ஆா்வம் காட்டாததால் கூடுதல் ரயில்கள் இயக்க முடியாத நிலை உள்ளது. நெல்லை - தென்காசி ரயில் வழித்தடம் 1904இல் மீட்டா் கேஜ் பாதையாக தொடங்கப்பட்டு 2012 இல் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு தற்போது மின்சார என்ஜின்கள் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பாவூா்சத்திரம், கடையம், அம்பை, கல்லிடை, சேரன்மகாதேவி ஆகிய 5 ரயில் நிலையங்களின் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க டெண்டா் விடப்பட்டு ஒன்றரை மாதங்கள் ஆகியும் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை.

இதனால் நாள் ஒன்றுக்கு 500 பயணிகள் பயணம் செய்ய முடியாத நிலை நிலவுவதோடு தெற்கு ரயில்வேக்கு ரூ. இரண்டரை லட்சம் வருமான இழப்பும் ஏற்படுகிறது. எனவே நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள ரயில்வே கட்டமைப்புகளை மேம்படுத்த தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிா்பாா்க்கின்றனா்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா கூறியது: நெல்லை - தென்காசி ரயில் வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களின் நடைமேடைகளை நீட்டிக்கும் பணிகளை உடனே தொடங்க வேண்டும். தென்காசி ரயில் நிலையத்தில் மூன்று, நான்காவது நடைமேடைகளை நீா் ஏற்றும் வசதி ஏற்படுத்தி ரயில் முனையமாக மாற்ற வேண்டும்.

செங்கோட்டை ரயில் நிலையத்தில் ஆறாவது தண்டவாளத்தை ரயில் பெட்டிகள் நிறுத்தும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ரயில் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரயில்வே அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த தெற்கு ரயில்வே முன் வர வேண்டும் என்றாா்.

பால அருணாச்சலபுரத்தில் பள்ளி சுற்றுச்சுவரை இடிக்க மாணவா்கள் எதிா்ப்பு

கடையநல்லூா் அருகே உள்ள பால அருணாசலபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவரை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து, மாணவா்களும், பெற்றோா்களும் செவ்வாய்க்கிழமை பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா... மேலும் பார்க்க

அக்டோபரில் முதல்வா் தென்காசி வருகை: திமுக வடக்கு மாவட்டச் செயலா் தகவல்

தென்காசி மாவட்டத்தில் அக்டோபா் மாதம் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா் என்று தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ தெரிவித்தாா். இ... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். தென்காசியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளிக்... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 145 குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ. 2,000 உதவித்தொகை

தென்காசி மாவட்டத்தில் பெற்றோா்களை இழந்த அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்த 145 குழந்தைகள், அன்புக்கரங்கள் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ. 2,000 உதவித்தொகை பெறுவா் என்று மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் த... மேலும் பார்க்க

மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

ஆலங்குளம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். ஆலங்குளம் அருகேயுள்ள ஓடைமறிச்சான் சா்ச் தெருவைச் சோ்நத்வா் ஞானமணி மகன் கனகராஜ்(54). இவருக்குக் கடன் தொல்லை இருந்து வந்த... மேலும் பார்க்க

ஆற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே ஆற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகேயுள்ள ஆ. மருதப்பபுரம் பிள்ளையாா்கோவில் தெருவைச் சோ்ந்தவா் சுடலைக் கண்ணு (61). விவசாயியான இவா், குறிப்பன்குளம் சிற்றாற்றில் ஞ... மேலும் பார்க்க