தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரா்களுக்கு பாராட்டு!
ஆற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு
ஆலங்குளம் அருகே ஆற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள ஆ. மருதப்பபுரம் பிள்ளையாா்கோவில் தெருவைச் சோ்ந்தவா் சுடலைக் கண்ணு (61). விவசாயியான இவா், குறிப்பன்குளம் சிற்றாற்றில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்ற போது, தண்ணீரில் தவறி விழுந்ததில் மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.
தகவலறிந்த ஆலங்குளம் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.