செய்திகள் :

IND vs PAK: "இதற்காகத்தான் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுகிறது" - மத்திய அமைச்சர் ஓபன் டாக்

post image

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் ஆடக்கூடாது என்று பல தரப்பிலிருந்து குரல்கள் எழுந்தன. இப்போதும் வந்து கொண்டிருக்கிறது.

இத்தகைய சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஆசிய கோப்பைத் தொடரில் நேற்று (செப்டம்பர் 14) நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வென்றது.

ஆனால், வெற்றிக்குப் பின்னர் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்துவிட்டனர்.

india vs pakistan
இந்தியா vs பாகிஸ்தான்

அதற்கு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், "பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிப்புக்குள்ளான மக்களின் பக்கம் நிற்பதன் மூலம் எங்களின் ஒற்றுமையை வெளிக்காட்ட விரும்புகிறோம்" என்று காரணம் தெரிவித்திருக்கிறார்.

இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த நிலையில், பாகிஸ்தானுடன் இந்தியா ஏன் விளையாடுகிறது என்பது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார்.

அதில் கிரண் ரிஜிஜூ, "இந்தப் போட்டியைப் பொறுத்தவரை இதுவொன்றும் இந்தியா, பாகிஸ்தான் இருதரப்பு தொடர் அல்ல.

ஆசிய கோப்பையில் இந்தியா விளையாடவில்லை என்றால், தொடரிலிருந்து இந்தியா வெளியேறிவிடும்.

மேலும், ஒலிம்பிக், உலகக் கோப்பை போன்றவை பாகிஸ்தானுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும்தான்.

ஒரு நாட்டுடனான பகை காரணமாக நாம் ஒலிம்பிக்கிற்கு செல்லவில்லை என்றால், இழப்பு யாருக்கு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களின் உணர்வு சரிதான், ஆனால் அந்த உணர்வுக்குப் பின்னால் பகுத்தறிவு சிந்தனை இருக்க வேண்டும்.

ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை, ஆசிய கோப்பை போன்றவற்றில் பல நாடுகளும் ஒன்றாக இணைந்து விளையாடுகின்றன.

இங்கு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தனி விளையாட்டு இல்லை" என்று கூறினார்.

பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் இந்திய வீரர்களின் இத்தகிய செயல் குறித்து உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.

'இப்படி நடந்துப்பாங்கனு எதிர்ப்பார்க்கல'- கைக்குலுக்காத இந்திய வீரர்கள் குறித்து பாக் பயிற்சியாளர்

ஆசியக்கோப்பை இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் வெற்றிக்குப் பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் சென்ற சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என ஒ... மேலும் பார்க்க

``பண்புடன் நடந்துக்கொள்ள வேண்டும்'' - கைக்குலுக்க மறுத்த இந்திய வீரர்கள்; PCB தலைவர் மோசின் நக்வி

ஆசியக் கோப்பை இந்தியா–பாகிஸ்தான் போட்டியில் வெற்றிக்குப் பிறகு, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் சென்ற சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. “விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும்” ... மேலும் பார்க்க

Ind vs Pak: இறுக்கிப் பிடித்த இந்திய சுழல்; அதிரடி வெற்றி - கைகொடுக்காமல் சென்ற வீரர்கள்!

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆசிய கோப்பை 2025 லீக் போட்டி பெரும் பரபரப்புக்கு நடுவே நடந்துவருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த போட்டியில், டாஸ் போடப்பட்டபோது கேப்டன்கள் இருவரும் கைகுலுக்... மேலும் பார்க்க

Asia Cup 2025: பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்க மறுத்த சூர்யகுமார் யாதவ் - நடந்தது என்ன?

துபாய் சர்வதேச மைதானத்தில் ஆசியக் கோப்பை 2025-க்கான இந்தியா - பாகிஸ்தான் லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே ரசிகர்கள் மைதானத்தை நிரப்பியுள்ளனர். இரண்டு கேப்டன்களுக்கும் உற... மேலும் பார்க்க

The Ashes: ``நான் நிர்வாணமாக வலம் வருகிறேன்'' - வைரலாகும் முன்னாள் கிரிக்கெட் வீரரின் சவால்!

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையே நடக்கும் புகழ்பெற்ற தொடர் ஆஷஸ் டெஸ்ட் (The Ashes). நமக்கு ஐபிஎல் போல ஆஸ்திரேலியாவுக்கு ஆஷஸ் தொடர் மிகவும் பிரபலம். இந்தத் தொடர் நவம்பர் மாதம் நடக்கவிருக்க... மேலும் பார்க்க

Ashes: "ஆஷஸ் சீரிஸ்ல ரூட் இத பண்லனா மெல்போர்ன் கிரவுண்டுல இத செய்யுறேன்..!" - சவால் விட்ட ஹைடன்

கிரிக்கெட் பரிணாம வளர்ச்சி டெஸ்ட் போட்டிகளில் ஆரம்பித்து 60 ஓவர் ஒருநாள் போட்டி, 50 ஓவர் ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி, 10 ஓவர் போட்டி, 100 பந்துகள் போட்டி என எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது.ஆனாலும், ... மேலும் பார்க்க