செய்திகள் :

”பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை, கூட்டணியை ஏற்க வாய்ப்பில்லை”- டி.டி.வி.தினகரன்!

post image

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``செங்கோட்டையன் விவகாரத்திற்கு அவர் தான் பதில் அளிப்பார். பழனிசாமி டில்லிக்கு போறாது அவர் விஷயம்.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

எனது நிலைப்பாடு, குறித்து பல இடங்களில் கூறிவிட்டேன். இந்த தேர்தலில், அ.ம.மு.க வெற்றி முத்திரை பதிக்கும். நாங்கள் மற்றவர்கள் போன்று, அகங்காரம், ஆணவத்தில் கூறவில்லை. அ.ம.மு.க அங்கம் வகிக்கும் கூட்டணி, ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க-வில் பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை, அந்த கூட்டணியை அ.ம.மு.க ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. 75 மற்றும் 50 வருட கட்சிக்கு இணையாக, அ.ம.மு.க வளர்ந்து விட்டது. அரசியல் ஆரூடம் கூறும் அளவுக்கு நான் ஞானி கிடையாது" என்றார்.

வஃக்ப் திருத்தச் சட்டம்: "விஜய் தலைமையில் மனு, மகத்தான வெற்றி" - தவெக அறிக்கை!

வக்ஃப் சட்ட திருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளது தமிழக வெற்றிக் கழகம். மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் சட்ட திருத்தத்துக்கு முழுமையாக தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் சட்டதிருத்தத்த... மேலும் பார்க்க

Waqf: வக்ஃப் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு; என்ன சொல்கிறார்?

பாஜக கூட்டணி அரசு கடந்த ஏப்ரலில் நிறைவேற்றிய வக்ஃப் திருத்த மசோதா 2025-க்கு எதிராக அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தனிநபர்கள் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விரித்து வந்த உச்ச நீதிமன்றம், வக்ஃப... மேலும் பார்க்க

"விஜய்க்கு ஆதரவு இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்" - சொல்கிறார் கார்த்தி சிதம்பரம்

"கட்சியில் குழப்பம் ஏற்பட்டால் டெல்லி செல்வது அவர்களுடைய மைனஸாக உள்ளது. அதை விட மிகப்பெரிய மைனஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது..." என்று அதிமுக குறித்து விமர்சித்துள்ளார் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கா... மேலும் பார்க்க

"சசிகலா விடுதலையாகி வரும்போது கூட விடிய விடிய கூட்டம் வந்தது" - விஜய் பிரசாரம் குறித்து பி.மூர்த்தி

"திமுகவுக்காகப் பிரசாரம் செய்ய வந்த நடிகர் வடிவேலுவைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்" என்று அமைச்சர் பி.மூர்த்தி பேசியுள்ளார்.தவெக தலைவர் விஜய்மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பி.மூர்த்தி, ... மேலும் பார்க்க

அதிமுக: "நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்" - என்ன சொல்கிரார் சசிகலா?

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது ந... மேலும் பார்க்க