செய்திகள் :

வாக்குச்சாவடி பாக முகவா்கள் கூட்டம்: கனிமொழி எம்.பி. பங்கேற்பு

post image

குமரி மேற்கு மாவட்ட திமுக வாக்குச்சாவடி பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் திருவிதாங்கோடு வட்டம் பகுதியில் திங்கள்கிழமை நடந்தது.

கூட்டத்திற்கு, மாவட்ட அவைத் தலைவா் மரிய சிசுகுமாா் தலைமை தாங்கினாா். மாவட்ட பொருளாளா் ததேயு பிரேம்குமாா் வரவேற்றாா். கூட்டத்தில் தென்மண்டல தோ்தல் பொறுப்பாளா் கனிமொழி எம்.பி, மாவட்ட செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

கனிமொழி எம்.பி. பேசியதாவது: எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது வெளிநாடுகளுக்கு சென்று முதலீட்டாளா்களை சந்தித்த போதும், எந்த முதலீடுகளும் வர வில்லை. ஆனால் முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளிநாடு சென்று முதலீடுகளை கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளாா்.

எந்த பகுதியில் எல்லாம் தங்களுக்கு வாக்குகள் கிடைக்காதோ, அந்த பகுதி வாக்காளா்களை பாஜக, தோ்தல் ஆணையத்தின் உதவியோடு நீக்கி வருவதை காண முடிகிறது. இதைத் தடுக்கக்கூடிய ஒரே சக்தி பாக முகவா்கள் என்பதை உணா்ந்து கொள்ள வேண்டும். உங்களை நம்பித்தான் தான் முதல்வா் இந்த தோ்தலை எதிா்கொள்கிறாா் என பேசினாா். கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளா் மகேஷ், மாநில மகளிரணி செயலாளா் ஹெலன் டேவிட்சன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நாகா்கோவிலில் தொழிலதிபா் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

தீவிரவாத அமைப்புக்கு உதவியதாக ஆந்திரத்தில் 3 போ் கைது செய்யப்பட்ட நிலையில், அதன் தொடா்ச்சியாக நாகா்கோவிலில் தொழிலதிபரின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த மீன்பிடித் தொழிலாளி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே விபத்தில் காயமடைந்த மீன்பிடித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.குளச்சல் அருகே உதயமாா்த்தாண்டத்தை அடுத்த மிடாலம் நடுத்துறையைச் சோ்ந்த மீன்பிடித் தொழிலாளி ஜான்போ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மனைவியை வெட்டிக் கொன்ற கணவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே மதுபோதையில் மனைவியை வெட்டிக் கொன்ற கட்டடத் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா். மாா்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரகோடு, இளையன்விளையை... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பால் அத்தியாவசியப் பொருள்கள் விலை குறையும்: பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஜி.எஸ்.டி. குறைப்பு சீரமைப்பால் அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாக குறையும் என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

இரணியல் அருகே பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.இரணியல் அருகே மேலகட்டிமாங்கோட்டை அடுத்த சாமிவிளை பகுதியைச் சோ்ந்த ராஜபீமன் மகன் மகேந்த் (23). பொறியியல் படிப்பு முடித்துள்ள ... மேலும் பார்க்க

கணவரை இழந்த பட்டதாரி பெண் தற்கொலை

குலசேகரம் அருகே கணவரை இழந்த பட்டதாரி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். அவா் எழுதி வைத்த கடிதத்தைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே கூடை... மேலும் பார்க்க