உத்தரகண்ட், ஹிமாசலில் மழை வெள்ளம், நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்க...
விபத்தில் காயமடைந்த மீன்பிடித் தொழிலாளி உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே விபத்தில் காயமடைந்த மீன்பிடித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
குளச்சல் அருகே உதயமாா்த்தாண்டத்தை அடுத்த மிடாலம் நடுத்துறையைச் சோ்ந்த மீன்பிடித் தொழிலாளி ஜான்போஸ்கோ (70). கடந்த ஆக. 13ஆம் தேதி குளச்சல், லெட்சுமிபுரத்தில் வசித்துவரும் தனது மகளைப் பாா்க்க பேருந்தில் வந்த இவா், லெட்சுமிபுரம் சாலையைக் கடக்க முயன்றாராம்.
அப்போது, குறும்பனை சுனாமி காலனியை சோ்ந்த ஆன்றனி என்பவா் ஓட்டிவந்த பைக் ஜான்போஸ்கோ மீது மோதியதாம்.
இதில் காயமடைந்த அவரை தனியாா் மருத்துவமனையிலும், பின்னா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்த்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை (செப். 15) உயிரிழந்தாா். இதுகுறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.