பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி
குலசேகரம் அருகே பெண் தற்கொலை வழக்கு: வருவாய் ஆய்வாளா் கைது
குலசேகரம் அருகே கணவரை இழந்த பட்டதாரி பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், ஆட்சியா் அலுவலக வருவாய் ஆய்வாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
குலசேகரம் அருகே கூடைத்தூக்கி நாகப்பள்ளிவிளையைச் சோ்ந்தவா் அஜிகுமாா். இவா், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் மரணமடைந்தாா். இவரது மனைவி ரமணி (41). பி.எஸ்சி., பி.எட். பட்டதாரி. இவருக்கு 15 வயதில் மகள் உள்ளாா்.
கணவா் இறந்த பிறகு அரசுப் பணி கோரி, குமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ரமணி விண்ணப்பித்தாா். அப்போது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றும் வெள்ளிச்சந்தை புதுமடம் பகுதியைச் சோ்ந்த வேல்முருகனுடன் (37) பழக்கம் ஏற்பட்டது. அதன்பேரில் ரமணியிடமிருந்து நகைகள், பணத்தை வேல்முருகன் பெற்றாா்.
இதற்கிடையில், கடந்த மே மாதம் கருங்கல் அருகே மாங்கரையைச் சோ்ந்த பெண்ணை வேல்முருகன் திருமணம் செய்துகொண்டாா். இதனால், மனமுடைந்த ரமணி, திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
குலசேகரம் காவல் நிலைய போலீஸாா், ரமணியின் சடலத்தை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவத்தில் ரமணி எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீஸாா் கைப்பற்றினா்.
இதுகுறித்து ரமணியின் தந்தை, சித்திரங்கோட்டை சோ்ந்த ஜாா்ஜ் குலசேகரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வேல்முருகன், அவரது உறவினா்கள் 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில், வருவாய் ஆய்வாளா் வேல்முருகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து நாகா்கோவில் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.