செய்திகள் :

தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்

post image

சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை விடுமுறைக் கால கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை உள்ளிட்ட விடுமுறைக் கால கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சென்னையிலிருந்து மதுரை, செங்கோட்டை, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாகர்கோவில்-தாம்பரம்-நாகர்கோவில்: நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் (06012) செப். 28, அக். 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) நாகர்கோவிலிலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.30 மணிக்கு சென்னை தாம்பரம் சென்று சேரும். மறுவழித்தடத்தில் தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் (06011) செப். 29, அக். 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமை) தாம்பரத்திலிருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி: திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06070) செப். 25, அக். 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) திருநெல்வேலியிலிருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை சென்று சேரும். மறுவழித்தடத்தில் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06069) சென்னையிலிருந்து செப். 26, அக். 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமைகள்) நண்பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, புதுக்கோட்டை காரைக்குடி தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

நாகர்கோவில்- சென்னை: நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06054) செப். 30, அக். 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) நாகர்கோவிலிலிருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்று சேரும். மறுவழித்தடத்தில் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் சிறப்பு ரயில் (06053) அக்.1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) சென்னையிலிருந்து காலை 4.15 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.30 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

இந்த ரயில்கள் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தூத்துக்குடி - சென்னை: தூத்துக்குடி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06018) தூத்துக்குடியிலிருந்து செப். 29, அக். 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமை) இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை சென்று சேரும். மறுவழித்தடத்தில், சென்னை எழும்பூர் - தூத்துக்குடி சிறப்பு ரயில் (06017) செப். 30, அக். 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) சென்னை எழும்பூரிலிருந்து பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11.15 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும்.

இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

செங்கோட்டை- சென்னை: சென்னை சென்ட்ரல் - செங்கோட்டை சிறப்பு ரயில் (06121) செப். 24, அக். 1, 8, 15, 22 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) சென்னையிலிருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். மறுவழித்தடத்தில் செங்கோட்டை - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06122) செப். 25, அக். 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) செங்கோட்டையிலிருந்து இரவு 9.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்று சேரும்.

இந்த ரயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு புதன்கிழமை (செப். 17) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

போத்தனூர் சிறப்பு ரயில் : சென்னை சென்ட்ரல் - போத்தனூர் சிறப்பு ரயில் (எண் 06123) செப். 25 , அக். 2 , 9 , 16 , 23 ஆகிய வியாழக்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், போத்தனூர் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06124) செப்.26 ,அக். 3 , 10 , 17 , 24 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

இந்த ரயில் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், வடகோவை, கோவை ஆகிய நிலையங்கள் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பாலாறு மாசுபாடு விவகாரம்: குழு அமைத்தது உச்சநீதிமன்றம்

நமது நிருபர்பாலாறு மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக ஒரு தணிக்கை குழுவை அமைத்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.தமிழகத்தில் வேல... மேலும் பார்க்க

2-ஆம் நிலை காவலா் தோ்வுக்கு வழிகாட்டும் முகாம்

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் 2-ஆம் நிலைக் காவலா் தோ்வுக்கான வழிகாட்டும் முகாம் செப்.20-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து அந்த அகாதெமி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பண... மேலும் பார்க்க

சா்வதேச செஸ் சாம்பியன்: வைஷாலிக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் பாராட்டு

சா்வதேச செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா். ... மேலும் பார்க்க

என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் அரசுப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) மாணவா்கள் சிறப்பு முகாம்களுக்கான வழிகாட்டுதல்களை கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்... மேலும் பார்க்க

வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்: தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவு

தோ்தலின்போது வாக்குச்சாவடிகளுக்கு வரும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மாற்றுத்திறனாளி வைஷ்ணவி ஜெயக்குமா... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்கள்: என்எம்சி அனுமதி

தமிழகத்தில் 350 எம்பிபிஎஸ் இடங்கள் உள்பட நாடு முழுவதும், 6,850 இடங்களுக்கு அனுமதி அளித்து தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில், அடிப்படை கட்டமைப்பு இல்லாத மருத்துவக் கல்லூரிக... மேலும் பார்க்க