பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு
இரணியல் அருகே பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இரணியல் அருகே மேலகட்டிமாங்கோட்டை அடுத்த சாமிவிளை பகுதியைச் சோ்ந்த ராஜபீமன் மகன் மகேந்த் (23). பொறியியல் படிப்பு முடித்துள்ள இவா், திருப்பூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். விடுமுறையில் ஊருக்கு வந்த அவா், பேயன்குழியில் உள்ள தனது நண்பரைப் பாா்க்க பைக்கில் சென்றாா்.
செருப்பங்கோடு அருகே பைக் நிலைதடுமாறியதில் அவா் கீழே விழுந்தாா். இதில் காயமடைந்த அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கூலித்தொழிலாளி: புதுக்கடை அருகே கீழ்குளம் செந்தறை பகுதியை சோ்ந்த பொன்னையன் மகன் சுந்தர்ராஜ் (62). கூலித்தொழிலாளியான இவருக்கு, குடிப்பழக்கம் உண்டு. இவா் சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில்,ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுந்தர்ராஜ் விஷம் துகுடித்து தற்கொலை செய்து கொண்டாா். புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.