செய்திகள் :

IND vs PAK: "அவ்வாறு சட்டம் ஒன்றும் இல்லை" - இந்திய வீரர்களின் செயலை நியாயப்படுத்தும் BCCI அதிகாரி

post image

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பைத் தொடரில் செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் வெற்றிபெற்ற பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்க மறுத்த சம்பவம் மூன்று நாள்களாக பெரும் விவாதப்பொருளாக இருக்கிறது.

இந்த விவகாரத்தில், 'பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்கிறோம்' என கேப்டன் சூர்யகுமார் யாதவ் காரணம் தெரிவிக்க, `பாகிஸ்தானுடன் விளையாடவில்லையென்றால் இந்தியாவுக்குத்தான் இழப்பு' என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஒருபக்கம் கூறுகிறார்.

ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் வீரர்களிடம் இந்தியா வீரர்கள் கைகுலுக்க மறுத்த விவகாரம்
India VS Pakistan

இன்னொருபக்கம், இந்திய அணிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. இருப்பினும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பிலிருந்து எந்தவொரு அறிக்கையும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) மூத்த அதிகாரியொருவர், எதிரணி வீரர்களிடம் கைகுலுக்க வேண்டும் என சட்ட எதுவும் இல்லையென்று கூறியிருக்கிறார்.

பெயர் வெளியிட விரும்பாத அந்த மூத்த அதிகாரி தனியார் ஊடகத்திடம், "எதிரணி வீரர்களிடம் கைகுலுக்குவது தொடர்பாக விதிமுறைகள் புத்தகத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இது நல்லதைப் பரப்பும் ஒரு வித வெளிப்பாடு தானே தவிர உலகளவில் பின்பற்றப்படும் சட்டம் அல்ல.

BCCI
BCCI

அவ்வாறு சட்டமாக இல்லாதபோது, விரிசல் நிறைந்த உறவின் வரலாற்றைக் கொண்ட நாட்டின் அணியுடன் இந்திய அணி கைகுலுக்க வேண்டிய கட்டாயம் இல்லை" என்று கூறியிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் இந்திய அணியினரின் செயல்பாடு குறித்த உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

IND vs PAK: "இதற்காகத்தான் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுகிறது" - மத்திய அமைச்சர் ஓபன் டாக்

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் ஆடக்கூடாது என்று பல தரப்பிலிருந்து குரல்கள் எழுந்தன. இப்போதும் வந்து கொண்டிருக்கிறது.இத்தகைய சூழலில், ஐக்கிய அரபு அ... மேலும் பார்க்க

'இப்படி நடந்துப்பாங்கனு எதிர்ப்பார்க்கல'- கைக்குலுக்காத இந்திய வீரர்கள் குறித்து பாக் பயிற்சியாளர்

ஆசியக்கோப்பை இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் வெற்றிக்குப் பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் சென்ற சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என ஒ... மேலும் பார்க்க

``பண்புடன் நடந்துக்கொள்ள வேண்டும்'' - கைக்குலுக்க மறுத்த இந்திய வீரர்கள்; PCB தலைவர் மோசின் நக்வி

ஆசியக் கோப்பை இந்தியா–பாகிஸ்தான் போட்டியில் வெற்றிக்குப் பிறகு, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் சென்ற சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. “விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும்” ... மேலும் பார்க்க

Ind vs Pak: இறுக்கிப் பிடித்த இந்திய சுழல்; அதிரடி வெற்றி - கைகொடுக்காமல் சென்ற வீரர்கள்!

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆசிய கோப்பை 2025 லீக் போட்டி பெரும் பரபரப்புக்கு நடுவே நடந்துவருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த போட்டியில், டாஸ் போடப்பட்டபோது கேப்டன்கள் இருவரும் கைகுலுக்... மேலும் பார்க்க

Asia Cup 2025: பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்க மறுத்த சூர்யகுமார் யாதவ் - நடந்தது என்ன?

துபாய் சர்வதேச மைதானத்தில் ஆசியக் கோப்பை 2025-க்கான இந்தியா - பாகிஸ்தான் லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே ரசிகர்கள் மைதானத்தை நிரப்பியுள்ளனர். இரண்டு கேப்டன்களுக்கும் உற... மேலும் பார்க்க

The Ashes: ``நான் நிர்வாணமாக வலம் வருகிறேன்'' - வைரலாகும் முன்னாள் கிரிக்கெட் வீரரின் சவால்!

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையே நடக்கும் புகழ்பெற்ற தொடர் ஆஷஸ் டெஸ்ட் (The Ashes). நமக்கு ஐபிஎல் போல ஆஸ்திரேலியாவுக்கு ஆஷஸ் தொடர் மிகவும் பிரபலம். இந்தத் தொடர் நவம்பர் மாதம் நடக்கவிருக்க... மேலும் பார்க்க