காஸாவில் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை நினைத்துப்பாருங்கள்! -இஸ்ரேலிடம...
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.88.08 ஆக நிறைவு!
மும்பை: அதிக கட்டணங்களைத் தொடர்ந்து, சிக்கல்களைத் தீர்க்க அமெரிக்க-இந்திய பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.88.08 ஆக நிறைவு.
இன்று தொடங்கும் தொடங்கும் இரண்டு நாள் ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி கூட்டம் மற்றும் அமெரிக்க பொருளாதார தரவு ஏமாற்றமளிப்பதை முன்னிட்டு இந்திய ரூபாய் மதிப்பு வலுப்பெற்றதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 88.05 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.88.01 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.88.16 ஐ தொட்ட நிலையில், முடிவில் 8 காசுகள் உயர்ந்து ரூ.88.08-ஆக முடிவடைந்தது.
நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.88.16 ஆக நிலைபெற்றது.
இதையும் படிக்க: