பிரதமரின் பிறந்தநாளில் 75 லட்சம் மரக்கன்றுகள் நட ஒடிசா அரசுத் திட்டம்!
ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்வு!
நேற்று பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிந்த நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,852.11 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 11.50 மணியளவில் சென்செக்ஸ் 357.23 புள்ளிகள் அதிகரித்து 82,142.98 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 103.50 புள்ளிகள் உயர்ந்து 25,172.70 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
8 நாள்கள் ஏற்றத்திற்குப் பிறகு பங்குச் சந்தை நேற்று சரிந்த நிலையில் இன்று மீண்டும் நேர்மறையில் வர்த்தகமாவது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ஆட்டோ பங்குகள் சரிவைச் சந்தித்த நிலையில் இன்று ஏற்றம் கண்டு வருகின்றன.
மஹிந்திரா & மஹிந்திரா, கோட்டக் வங்கி, ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி, பவர்கிரிட் ஆகியவை இன்று முக்கிய லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.
அதேநேரத்தில் டைட்டன், ஸ்ரீராம் பைனான்ஸ், பஜாஜ் பைனான்ஸ், நெஸ்லே உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வருகின்றன.
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையால் டெக்ஸ்டைல் உள்ளிட்ட துறைகளின் பங்குகள் உயர்ந்து வருகின்றன.