பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு பரிசு அனுப்பிய மெஸ்ஸி! என்ன தெரியுமா?
இளையராஜா பாராட்டு விழா: "பெண்களை அழைக்காதது ஏன்?" - குஷ்பு கேள்வி
பாஜக மையக்குழு கூட்டம் பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல் சந்தோஷ் தலைமையில் சென்னை அக்கறையில் இன்று ( செப்.16) நடைபெற்று வருகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலை ஓட்டி கட்சியில் நிலவும் சிக்கல்களுக்குத் தீர்வுக்கான இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
இதில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, குஷ்பு, சரத்குமார் உள்ளிட்ட பாஜகவைச் சேர்ந்த பலர் பங்கேற்று இருக்கின்றனர்.

இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன் பாஜக மாநில துணைத் தலைவரான குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
"எங்களுக்கு அதிமுகவுடன் எந்தப் பிரச்னையும் கிடையாது. கடந்த 5 வருடங்களில் திமுக ஆட்சியில் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் குடும்ப அரசியல் மட்டும்தான் நடந்துகொண்டிருக்கிறது.
சமீபத்தில் இளையராஜாவின் பாராட்டு விழாவில்கூட முன்வரிசையில், முதல்வர் குடும்பத்தில் உள்ளவர்கள்தான் அமர்ந்திருந்தார்கள். பெண்களைப் பற்றி பெருமையாகப் பேசுகிறார்கள்.
ஆனால் அந்தக் கூட்டத்தில் பெண்களை நான் பெரிதாகப் பார்க்கவில்லை. இளையராஜாவின் இசையில் எத்தனை பெண்கள் பாடி இருப்பார்கள். ஆனால் இந்த விழாவிற்குப் பெண்களை அவர்கள் கூப்பிடவில்லை.

பெண்களுக்காக நாங்கள் நிறைய விஷயங்களைச் செய்கிறோம் என்று முதலமைச்சர் சொல்கிறார்.
இந்த விழாவிற்கு பெண்களை அழைக்காதது ஏன்? யாரையும் அவர்கள் கூப்பிடவில்லை. அதனை நானும் விசாரித்துவிட்டேன்" என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து விஜய்யின் பிரச்சாரம் குறித்த கேள்விக்கு, "கருத்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார்.
தேர்தலில் பார்ப்போம். விமர்சனம் செய்வதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. மக்கள் அதனை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.