செய்திகள் :

"எடப்பாடிதான் முதல்வர் என்றதும் செம்மலை சுவர் எகிறிக் குதித்து ஓடினார்" - கூவத்தூர் குறித்து தினகரன்

post image

சென்னையில் நேற்று (செப்.15) நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "சில பேரைக் கைக்கூலியாக வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகின்றனர். கைக்கூலிகள் யாரென்று அடையாளம் கண்டுவிட்டோம். அதற்கு விரைவில் முடிவு கட்டப்படும்" என்றும், "அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க 18 எம்எல்ஏக்களைக் கடத்திக்கொண்டு சென்றார். அப்படிப்பட்டவர்களையும், கட்சியில் சேர்க்கணுமா? இதையெல்லாம் யார் ஏற்றுக்கொள்வது?" என்றும் யார் பெயரையும் குறிப்பிடாமல் பேசியிருந்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரான டிடிவி தினகரன் இன்று (செப்.16) தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

கூவத்தூரில் நடந்த சில விஷயங்கள் குறித்துப் பேசிய டிடிவி தினகரன், "சாத்தான் வேதம் ஓதுவது போல நன்றியைப் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். மற்ற கட்சியைச் சேர்ந்தவர்களும் தமிழக மக்களும் முட்டாள் என நினைத்து எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

துரோகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாத பழனிசாமி, நன்றியைப் பற்றிப் பேசுகிறார். ஜெயலலிதா ஆட்சியைக் கலைக்க முற்பட்டபோது பாஜக காப்பாற்றியதாக எடப்பாடி பேசுகிறார். அதுவே தவறு.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் முதல்வராக இருந்தார். அவருக்குப் பதிலாக சசிகலாவை முதல்வராக்க எம்எல்ஏக்கள் அனைவரும் முடிவு செய்து, கவர்னரிடம் மனு கொடுத்தார்கள்.

அப்போது திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த போது, இவரைக் காப்பாற்றியது பாஜக இல்லை. அதிமுக எம்எல்ஏக்கள் தான்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டு வாக்களித்ததுதான் எடப்பாடி முதல்வராகக் காரணம். அப்போது கூட நான்தான் முதல்வர் எனச் சொன்னால் எம்எல்ஏக்கள் பலரும் ஆதரவுக் கடிதத்தில் கையெழுத்துப் போட மாட்டார்கள்.

கையெழுத்துகளை வாங்கிய பிறகு அதைச் சொல்லுங்கள் எனச் சொன்னவர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடியை எல்லாம் முதல்வரா ஏற்க முடியாது எனச் சொல்லி பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

செம்மலை எல்லாம் சுவர் எகிறிக் குதித்து ஓடினார். அவர்களை எல்லாம் பாதுகாத்து வைத்து, அவர்கள் வாக்களித்தாலேயே எடப்பாடியால் முதல்வராக முடிந்தது. ஆனால், அந்த நன்றியை எல்லாம் மறந்தவர் தான் எடப்பாடி பழனிசாமி" என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Trump: நியூயார்க் டைம்ஸுக்கு எதிராக அவதூறு வழக்கு; ரூ.1.3 லட்சம் கோடி இழப்பீடு கேட்கும் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் முன்னணி செய்தித்தாள் நிறுவனமான நியூயார்க் டைம்ஸ் மீது வழக்கு தொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அவரைக் குறித்து வெளியிடப்பட்ட பொய்-செய்த... மேலும் பார்க்க

ADMK: "அரிதாரம் பூசியவரெல்லாம் அரசியல் செய்ய முடியுமா என்றனர்; ஆனால்..." - செல்லூர் ராஜூ

"மு.க.ஸ்டாலின் எல்லாவற்றையும் பேச்சுக்காகதான் சொல்வார், ஆனால், செயல்திறன் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான்" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.செல்லூர் ராஜூஅறிஞர் அண்ணா பிறந்... மேலும் பார்க்க

இளையராஜா பாராட்டு விழா: "பெண்களை அழைக்காதது ஏன்?" - குஷ்பு கேள்வி

பாஜக மையக்குழு கூட்டம் பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல் சந்தோஷ் தலைமையில் சென்னை அக்கறையில் இன்று ( செப்.16) நடைபெற்று வருகிறது.2026 சட்டமன்றத் தேர்தலை ஓட்டி கட்சியில் நிலவும் சிக்கல்களுக்கு... மேலும் பார்க்க

"அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியது பாஜக அல்ல; அதிமுக எம்எல்ஏக்கள்" - இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் பதில்

சென்னையில் நேற்று (செப்.16) நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "சில பேரைக் கைக்கூலியாக வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகின்றனர்.கைக்கூலிகள் யாரென்று அடையாளம் கண்டுவி... மேலும் பார்க்க

பாஜக - அதிமுக கூட்டணி: ”வரும் சட்டமன்றத் தேர்தலில் 5 முனைப்போட்டி இருக்கலாம்” - நயினார் நாகேந்திரன்

நெல்லையில் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை இணைப்பது குறித்து இப... மேலும் பார்க்க

அதிமுக: "தன்மானம்தான் முக்கியம் என்றால் டெல்லி சென்றது ஏன்?" - இபிஎஸ்யை விமர்சித்த டிடிவி தினகரன்

தஞ்சாவூரில் இன்று (செப்டம்பர் 16) அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரான டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார். அப்போது, "பழனிசாமி ஆட்சியைக் காப்பாற்றியது பாஜக அல்ல. அதிமுக எம... மேலும் பார்க்க