செய்திகள் :

கூவத்தூரில் நடந்தது என்ன தெரியுமா? இபிஎஸ் குறித்து உண்மையை உடைத்த தினகரன்!

post image

கூவத்தூர் நடந்தது என்ன தெரியுமா? என்பது குறித்து டிடிவி தினகரன் முதல்முறையாக செய்தியாளர் பேசியுள்ளார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான செங்கோட்டையன், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார்.

இதற்கு மத்தியில், தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (செப்.16) அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “கூவத்தூரில் என்னிடம் பேசிய பழனிசாமி, வாக்கெடுப்புக்கு முன்னர் நான்தான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்ல வேண்டாம்; யாரும் கையெழுத்து போட மாட்டார்கள் என பழனிசாமி தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை காப்பாற்றியது 122 எம்எல்ஏக்களே தவிர பாஜக அல்ல.

கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டு வாக்களித்ததால்தான் பழனிசாமி முதல்வர் ஆனார். ஆனால், தற்போது அப்பட்டமாக பொய் பேசி வருகிறார்.

வாக்கெடுப்பின் போது 122 எம்எல்ஏக்களில் எத்தனை பேர் பிச்சுக்கொண்டு போக இருந்தார்கள். அவர்களை யார் தடுத்து நிறுத்தியது. செம்மலை எல்லாம் தாண்டி குதித்து ஓடினார். பழனிச்சாமி என்றால் நாங்கள் இருக்க மாட்டோம் என்றார். வாக்கெடுப்பின் போது அவரை காப்பாற்றியது யார்?.

டிடிவி தினகரன் இருந்தால் ஆட்சி போய்விடும் அதனால் அவரை நீக்க வேண்டும் என தில்லியை கூறியதாக அவர் தெரிவித்தார். இவர் கட்சியை விட்டு நீக்கி விட்டு, பொய் பேசுகிறார்.

இவருடன் கூட்டணிக்கு பிரமாண்டமான கட்சி வரப்போகிறது என்று கூறுகிறார். ஒருவேளை இலங்கையில் இருந்து ஏதும் கட்சி வரப்போகிறதா என்று தெரியவில்லை. இந்த முறை பழனிசாமி அதலபாதாளத்திற்கு தள்ளப்படுவார்” என்றார்.

Do you know what happened in Koovathur? Dinakaran broke the truth about EPS!

இதையும் படிக்க : தன்மானம்தான் முக்கியம் என்றால் தில்லி சென்றது ஏன்? இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் கேள்வி!

5,400 பேருக்கு வேலைவாய்ப்பு... 4 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 4 புதிய தொழிற்பேட்டைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று(செப். 16) திறந்து வைத்தார்.முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (செப்.... மேலும் பார்க்க

10 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்... மேலும் பார்க்க

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தில்லி சென்றுள்ளார். தில்லி சென்றடைந... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் இளைஞர் ஆணவக் கொலை! நடந்தது என்ன?

மயிலாடுதுறையில் காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் ரூரல் ஊராட்சி அடியாமங்கலம் கிராமத்தில் பெரிய தெருவைச் சேர்ந்த குமார் - ர... மேலும் பார்க்க

ஆம்பூர் இளைஞர் கொலை: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது!

ஆம்பூர் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த இருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.வேலூர் மாவட்டத்தில் உள்ள அரங்கல்துருகம் ஊராட்சி காரப்பட்டு கிராமத்தில் தனியா... மேலும் பார்க்க

பாஜக கூட்டத்தில் பங்கேற்க அண்ணாமலை வருகை!

சென்னையில் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெறும் பாஜக குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வருகை தந்துள்ளார். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட... மேலும் பார்க்க