செய்திகள் :

பாஜக கூட்டத்தில் பங்கேற்க அண்ணாமலை வருகை!

post image

சென்னையில் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெறும் பாஜக குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வருகை தந்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வருகின்றன. முதலில் ஆட்சியில் பங்கு குறித்து இரு தரப்பினரும் பேசி வந்த நிலையில் சமீபத்தில் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் விலகினர்.

ஓபிஎஸ் - நயினார் நாகேந்திரன் இடையே கருத்து வேறுபாடு, எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையேயான கருத்து மோதல்கள் என கூட்டணியில் பல சிக்கல்கள் நிலவுகின்றன.

சமீபத்தில் செங்கோட்டையன், தில்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசினார். அதிமுகவில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் கெடு விதித்திருந்தார்.

இந்நிலையில் பாஜகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் இன்று சென்னையில் நடைபெறுகிறது.

கூட்டணி விவகாரம், தேர்தல் வியூகம், தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடு, மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து இதில் ஆலோசிக்கப்படுவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை தொடங்கிய கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை. டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக பங்கேற்கவில்லை என்று அண்ணாமலை விளக்கம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இன்று(செப். 16) பிற்பகல் கூட்டத்திற்கு வருகை தந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் கூட்டணி விவகாரங்கள், உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Former state president Annamalai participate in BJP meeting today in chennai

10 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்... மேலும் பார்க்க

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தில்லி சென்றுள்ளார். தில்லி சென்றடைந... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் இளைஞர் ஆணவக் கொலை! நடந்தது என்ன?

மயிலாடுதுறையில் காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் ரூரல் ஊராட்சி அடியாமங்கலம் கிராமத்தில் பெரிய தெருவைச் சேர்ந்த குமார் - ர... மேலும் பார்க்க

கூவத்தூரில் நடந்தது என்ன தெரியுமா? இபிஎஸ் குறித்து உண்மையை உடைத்த தினகரன்!

கூவத்தூர் நடந்தது என்ன தெரியுமா? என்பது குறித்து டிடிவி தினகரன் முதல்முறையாக செய்தியாளர் பேசியுள்ளார்.அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் ... மேலும் பார்க்க

ஆம்பூர் இளைஞர் கொலை: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது!

ஆம்பூர் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த இருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.வேலூர் மாவட்டத்தில் உள்ள அரங்கல்துருகம் ஊராட்சி காரப்பட்டு கிராமத்தில் தனியா... மேலும் பார்க்க

செல்லாக்காசுகளின் சலசலப்பு அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது: ஆர்.பி. உதயகுமார்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அதிமுகவுக்கு, சில செல்லாக்காசுகள் சலசலப்பு ஏற்படுத்தினாலும், எந்த பின்னடையும் ஏற்படுத்தாது என்று முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பா... மேலும் பார்க்க