செய்திகள் :

கேரள தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

post image

கேரள அரசின் தலைமைச் செயலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசின் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, காவல் துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், செயலக ஊழியர்கள் சிலர் மட்டும் வெளியேற்றப்பட்டு அங்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சோதனைகளில் சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்காததினால், அந்த மிரட்டல் போலியானது என காவல் துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

மேலும், மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சலின் விவரங்களின் மூலம் அந்த மர்ம நபரை பிடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கேரளம் மட்டுமின்றி நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களின் ஆட்சியர் அலுவலகங்கள், விமான நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்து வருவது தொடர் கதையாகியுள்ளது.

இதையும் படிக்க: மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் திட்டம்: பிகார் அரசு!

It has been reported that mysterious individuals have sent a bomb threat via email to the Kerala Government Secretariat.

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் சரண்!

சத்தீஸ்கரில், ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் ஒருவர், பாதுகாப்புப் படையினரிடம் இன்று (செப்.16) சரணடைந்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில், தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்பில் கடந்த 2005 ... மேலும் பார்க்க

பிரதமரின் பிறந்தநாளில் 75 லட்சம் மரக்கன்றுகள் நட ஒடிசா அரசுத் திட்டம்!

பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு 75 லட்சம் மரக்கன்றுகளை நட ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தத் திட்டம் தேர்தல் முறையில் செயல்படுத்தப்படும் என வனத்துற... மேலும் பார்க்க

மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் திட்டம்: பிகார் அரசு!

பிகாரில் உயர் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் வழங்கப்படும் என பிகார் அரசு அறிவித்துள்ளது.முன்னதாக, மாணவ விண்ணப்பதாரர்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்திலும், மாணவிகள், மாற்... மேலும் பார்க்க

ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மோரீஷஸ் பிரதமர் அஞ்சலி!

தேசிய தலைநகரில் உள்ள ராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மோரீஷஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் அஞ்சலி செலுத்தினார். 8 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த செப். 9-ம் தேதி ராம்கூலம் இந்தியா வந்தாா். பிரதமா... மேலும் பார்க்க

ரயில் பயணிகள் கனிவான கவனத்திற்கு..! முதல் 15 நிமிட முன்பதிவு ஆதார் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே!

ரயில் டிக்கெட் முன்பதிவுகளில் ஆதார் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முதல் 15 நிமிடம் அனுமதிக்கப்படும் என்றும், இந்த நடைமுறை வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சக... மேலும் பார்க்க

மும்பையில் கொட்டித் தீா்த்த மழை: போக்குவரத்து ஸ்தம்பித்தது

மும்பை: மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை திடீரென அதிக மழை பெய்தது. தாழ்வான இடங்களிலும் சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பொதுமக்கள் கடும் இன்னலை எதிா்கொண்டனா். மும்பை மற்றும் அதன் ... மேலும் பார்க்க