ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்!
மகாநதி தொடரில் முக்கிய நடிகர் மாற்றம்!
மகாநதி தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ஒருவர் மாற்றப்பட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடர், கடந்த 2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
பிரவீன் பென்னட் இயக்கி வரும் இத்தொடரில் லஷ்மிபிரியா, சுவாமிநாதன், ருத்ரன் பிரவீன், ஸ்வேதா , கம்ருதீன், பேபி காவியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். டிஆர்பியிலும் இத்தொடர் முன்னணியில் உள்ளது.
இந்தத் தொடருக்கான திரைக்கதை, வசனத்தை பிரியா தம்பி எழுதி வருகிறார். இவரின் திரைக்கதைக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு.
அந்தவகையில், தந்தையை இழந்த 4 சகோதரிகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்டும் சகோதரிகளுக்கும் அவர்களது கணவர்களுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தியும் இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தத் தொடரில் ராகவ் பாத்திரத்தில் நடித்து வந்த சஞ்சய் மோகன் மாற்றப்பட்டுள்ளார். இனி வரும் காலங்களில் அந்தப் பாத்திரத்தில் நடிகர் கார்த்திகேயன் நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கார்த்திகேயன் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து பிரபலமானவர். இதைத் தவிர இவர், யூடியூபில் நிறைய குறும்படங்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிக்க: ரூ. 500 கோடி வசூலித்தும் ஏமாற்றத்தைக் கொடுத்த கூலி!