பிரதமரின் பிறந்தநாளில் 75 லட்சம் மரக்கன்றுகள் நட ஒடிசா அரசுத் திட்டம்!
லோகாவால் இந்த அபாயம் இருக்கிறது: ஜித்து ஜோசஃப்
லோகா திரைப்படம் குறித்து இயக்குநர் ஜித்து ஜோசஃப் பேசியுள்ளார்.
ஓணம் வெளியீடாகத் திரைக்கு வந்த லோகா திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது. துல்கர் சல்மான் தயாரிப்பில் நடிகர்கள் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லன் நடித்த லோகா சூப்பர் ஹீரோ கதையாக உருவானது.
டோமினிக் அருண் இயக்கிய இப்படம் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய இயக்குநர் ஜித்து ஜோசஃப், “திரைத்துறையில் பல்வேறு வகையான திரைப்படங்கள் உருவாக வேண்டும். லோகாவின் வெற்றியால் இனி தொடர்ந்து சூப்பர் ஹீரோ கதைகளில் கவனம் செலுத்துவார்கள். சினிமாவுக்கு இது அபாயமானது.
முக்கியமாக, இனி வேறு பாணி திரைப்படங்களை எடுத்து அதை வெற்றி பெறச் செய்வது சவாலான விஷயம். நான் எல்லா வகையான திரைப்படங்களையும் எடுக்கவே விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஜித்து ஜோசஃப் இயக்கிய மிராஜ் திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.
இதையும் படிக்க: செப். 25-ல் மறுவெளியீடாகிறது விஜய்யின் குஷி படம்!