செய்திகள் :

போலீஸ் விசாரணையின்போது CCTV கட்; AI மூலம் தீர்வு - உச்ச நீதிமன்றம் யோசனை!

post image

காவல் நிலையங்களில் பயன்படாத CCTV கேமராக்களை கண்காணிப்பதற்காக முழுமையான தானியங்கி கட்டுப்பாட்டு அறைகளை அமைப்பது குறித்து பரிசீலித்துவருவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு, காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டு கேமராவை அணைத்துவிடுவது அல்லது பதிவுகளை அழித்துவிடுவது போன்ற நிகழ்வுகளைத் தடுக்க இந்தகைய அமைப்பு அவசியம் எனக் கூறியுள்ளனர்.

supreme court

முந்தைய உத்தரவுகளின் படி சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டிருந்தாலும், மாநில அதிகாரிகள் பின்பற்றுவதாகக் கூறி பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்தாலும்கூட, இந்த பிரச்னைகள் தொடர்கின்றன என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

"நாங்கள் சிந்திப்பது மனித தலையீடு இல்லாத ஒரு கட்டுப்பாட்டு அறையைப் பற்றி, அதில் அனைத்து கேமராக்களிலிருந்தும் ஒளிபரப்புகள் நேரடியாக வழங்கப்படும். ஏதேனும் ஒரு கேமரா செயலிழந்தால் உடனடியாக எச்சரிக்கை வரும். இந்த பிரச்னையை சமாளிக்கக் கூடிய வழி இதுதான். இதற்கு வேறு வழியில்லை" என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Police
Police

ஒரு சுயாதீன நிறுவனத்தால் காவல் நிலையங்களில் அடிக்கடி ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியம் எனக் கூறிய நீதிமன்றம், "நாங்கள் சில ஐ.ஐ.டி.களைச் சேர்ந்தவர்களைக் கொண்டு, ஒவ்வொரு CCTV-யும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கண்காணிக்கப்பட்டு, அந்த கண்காணிப்பு மனிதரால் அல்லாமல், முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவால் நடக்கும்படி ஒரு மென்பொருளை உருவாக்கச் சொல்லலாம்" என்றுள்ளனர்.

சிசிடிவிகள் செயல்படாமல் போகும்பட்சத்தில் அதை உடனடியாக பழுதுபார்க்க எச்சரிக்கைவிடுக்கும் வகையில் இது உருவாக்கப்படும் என்றுள்ளனர்.

Waqf Bill 2025: `முழுமையாக தடை விதிக்க முடியது; ஆனால்.!’ - உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதா 2025-ஐ பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றியிருக்கிறது. இந்த விவகாரத்தில், `சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் பாஜக அ... மேலும் பார்க்க

நற்பெயருக்கு களங்கம்: ஐஸ்வர்யா ராய் பெயர், படங்களை சட்டவிரோதமாக பயன்படுத்த தடை - கூகுளுக்கு உத்தரவு!

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்களை அவரது அனுமதி இல்லாமல் சிலர் சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றனர். அவரது புகைப்படத்தை ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் மாற்றி அதனை டிசர்ட், கப் போன்றவற்றில் கூட பயன்... மேலும் பார்க்க

``மாநிலப் பிரச்னைகளைத் தீர்க்க சுப்ரீம் கோர்ட் ஒன்றும் ஹெட்மாஸ்டர் கிடையாது'' - மத்திய அரசு வாதம்

மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்நாட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பதவியில் இருக்கும் ஆளுநர்கள் மாநில அமைச்சரவை அனுப்பும் மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடிப்பதாக எதிர்க்கட்ச... மேலும் பார்க்க

Judiciary: ``நீதித்துறையில் பாலின சமத்துவம் வேண்டும்'' - இந்திய வழக்கறிஞர்கள் கவுன்சில் சொல்வதென்ன?

நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி (Vipul Manubhai Pancholi) குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக அக்டோபர் 1, 2014 அன்று பதவியேற்றார்.பின்னர் ஜூலை 24, 2023 அன்று பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். ஆகஸ... மேலும் பார்க்க

``கோயில் பணத்தை கல்விக்கு செலவிடக் கூடாது என கேட்பது ஏன்? இதில் என்ன தவறு?" - உச்ச நீதிமன்றம்

சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில் கல்லூரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையைச் சேர்ந்த டி.ஆர். ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.மனுவில், கோயில் நில... மேலும் பார்க்க

`ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்' - 17 ஆண்டுக்கு பிறகு வெளிவரும் மும்பை மாஃபியா அருண் காவ்லி

மும்பையில் கொலை, மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த அருண் காவ்லி கடந்த 2007ம் ஆண்டு சிவசேனா கவுன்சிலர் கம்லாகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட... மேலும் பார்க்க