"ஆர்யன் கானிற்கு கேமரா முன் சிரிப்பதற்கு பயமாக இருக்கும்"- ராகவ் ஜுயால் சொல்லும் காரணம் என்ன?
ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், நெட் பிளிக்ஸில் வெளியாக இருக்கும் 'தி பாட்ஸ் ஆப் பாலிவுட்' என்ற வெப் சிரீஸ் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
ஆர்யன் கான் இயக்கும் இந்த வெப் சிரீஸில் ராகவ் ஜுயால், மனோஜ் பஹ்வா, மோனா சிங், அன்யா சிங், கௌதமி கபூர், ரஜத் பேடி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சல்மான் கான், கரண் ஜோஹர் மற்றும் ரன்வீர் சிங் போன்ற பிரபலங்கள் கேமியோ ரோலில் நடித்திருக்கின்றனர். வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி இந்த வெப் சிரீஸ் வெளியாக இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து 'தி பாட்ஸ் ஆப் பாலிவுட்' குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் இந்த வெப் சிரீஸில் நடித்த ராகவ் ஜுயால் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார்.
அப்போது ராகவ் ஜுயாலிடம் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் ஏன் கேமராக்கள் முன் சிரிப்பதில்லை என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், “ ஆர்யன் கானுக்கு கேமரா முன் சிரிப்பதற்கு பயமாக இருக்கும். கேமரா முன் ஆட்டிட்யூட் உடன் இருக்க விரும்புவார்.

ஆனால் எங்களுடன் இருக்கும்போது அவருடைய நகைச்சுவையான முகத்தைக் காட்டுவார். உண்மையிலேயே அவர் குழைந்தை மனம் படைத்தவர்.
அவரை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் நிச்சயமாக ஒரு நாள் கேமரா முன் உன்னை சிரிக்க வைப்பேன் என்று சொல்வேன்” என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...