செய்திகள் :

Venice Award: "பாலஸ்தீன குழந்தைகள் மட்டும் விதிவிலக்கல்ல" - விருதோடு இந்திய இயக்குநர் கண்ணீர்

post image

இத்தாலியில் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 6 வரை 82-வது வெனிஸ் திரைப்பட விழா (Venice Film Festival) நடைபெற்றது.

இதன் நிறைவு நாளில், இந்திய திரைப்பட இயக்குநர் அனுபர்ணா ராய் தன்னுடைய `சாங்ஸ் ஆஃப் ஃபர்கெட்டன் ட்ரீஸ் (Songs of Forgotten Trees)' என்ற இந்தி திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான ஒரிசோண்டி விருதை (Orizzonti Award for Best Director) வென்றார்.

Anuparna Roy - அனுபர்ணா ராய்
Anuparna Roy - அனுபர்ணா ராய்

இதன் மூலம், சிறந்த இயக்குநருக்கான ஒரிசோண்டி விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அனுபர்ணா ராய் பெற்றிருக்கிறார்.

இத்தனைக்கும் அனுபர்ணா ராய்க்கு, இதுதான் முதல் திரைப்படம். இதற்கு முன், ரன் டு தி ரிவர் (Run to the River) என்ற குறும்படத்தை இவர் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில், வெனிஸ் திரைப்பட விழாவில் விருதைப் பெறுகையில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக மேடையில் கண்ணீர் மல்க இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அனுபர்ணா ராய், "ஒவ்வொரு குழந்தைக்கும் அமைதி, சுதந்திரம், விடுதலைக்கான உரிமை இருக்கிறது. இதற்கு பாலஸ்தீனம் மட்டும் விதிவிலக்கல்ல.

இதற்காக நான் எந்த கைதட்டல்களையும் விரும்பவில்லை. இந்த நேரத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நிற்பது என் கடமை.

இவ்வாறு கூறுவதால் என்மீது என் நாட்டுக்கு அதிருப்தி வரலாம். ஆனால், அது எனக்கு ஒரு பிரச்னையுமல்ல" என்று கூறினார்.

Bahubali: "ராஜமாதாவாக ஶ்ரீதேவி நடிக்காததற்குக் காரணம் இவர்கள்தான்" - உடைத்துப் பேசும் போனி கபூர்

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் அர்கா மீடியா வொர்க்ஸ் (Arka Media Works) தயாரிப்பில், பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், ராணாடகுபதி, சத்யராஜ், நாசர் ஆகியோர் நடித்த பாகுபலியின் இரண்டு பாகங்களும்... மேலும் பார்க்க

"சல்மான் கானிடம் எச்சரிக்கையாக இருக்கும் படி அனுராக் காஷ்யப் சொன்னார்" - 'தபாங்' பட இயக்குநர் பளீச்

நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளியான தபாங் படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இப்படத்தை இயக்குநர் அபினவ் காஷ்யப் இயக்கினார். இவர் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் சகோதரர் ஆவர். தபாங் படத்திற்குப் பிறகு... மேலும் பார்க்க

நடிகைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புகார்: காவல்துறையின் வலையில் நடிகை சிக்கியது எப்படி?

வங்காள திரைப்படம், தொலைக்காட்சி தொடர், விளம்பரங்கள் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றவர் நடிகை அனுஷ்கா தாஸ். இவரின் இயற்பெயர் மூன் தாஸ். 2007-ம் ஆண்டு இவரின் காதலர் அவினாஷ் பூபன் பட்னாயக் மும்ப... மேலும் பார்க்க

Shilpa Shetty: தொழிலதிபரிடம் ரூ.60 கோடி மோசடி; ஷில்பா ஷெட்டி, கணவருக்கு எதிராகத் தேடுதல் நோட்டீஸ்

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் எதாவது ஒரு சர்ச்சையில் தொடர்ந்து சிக்கி வருகின்றனர். ஏற்கனவே ராஜ் குந்த்ரா ஆபாசப் படம் தயாரித்தது மற்றும் கிரிப்டோகரன்சி பிரச்னையில் சிக... மேலும் பார்க்க

Shilpa Shetty: தென்னிந்திய உணவுகளுக்காக புதிய உணவகம்; பழைய உணவகத்தை மூடும் ஷில்பா; பின்னணி என்ன?

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி ரியாலிட்டி ஷோ, நடிப்பு என இருந்தாலும் சொந்தமாக மும்பையில் ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார். மும்பையில் பாந்த்ரா, பரேல் பகுதியில் பாஸ்டியன் என்ற பெயரில் ரஞ்சித் பிந்த்ரா என்பவர... மேலும் பார்க்க

பாலிவுட்டில் பாலின பாகுபாடு: "நடிகர்களுக்கு மட்டும் நல்ல கார், அறை; ஆனால்" - கிருத்தி சனோன் வேதனை

பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் ஐநா சபையின் பாலின சமத்துவத்திற்கான கெளரவ இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆண் மற்றும் பெண் இடையே இருக்கும் பாரபட்சமான போக்கை நீக்கவும், இது தொடர்பாக மக்கள் மத்தியில... மேலும் பார்க்க