செய்திகள் :

TVK திருவாரூர்: கலைஞர் தொகுதியில் விஜய்; நாகையிலிருந்து பின்தொடரும் தொண்டர்கள்!

post image

நாகையிலிருந்து திருவாரூர் நோக்கி விஜய் பயணம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், கடந்த வாரம் முதல் சனிக்கிழமை தோறும் அனைத்து மாவட்டங்களுக்கும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டார்.

அதன்படி, தனது சுற்றுப்பயணத்தைக் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 13) முதல் மாவட்டமாக திருச்சியிலிருந்து தொடங்கினார்.

அதைத்தொடர்ந்து, இரண்டாவது வரமாக நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் நோக்கி இன்று (செப்டம்பர் 20) சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

பிற்பகல் 1 மணியளவில் நாகப்பட்டினம் புத்தூரில் தனது தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய விஜய், "மீனவர்களுக்காகக் குரல் கொடுப்பது நமது கடமை. இதே நாகையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு நான் குரல் கொடுத்தேன்.

எனக்குப் பரப்புரை மேற்கொள்ள விதிக்கும் கட்டுப்பாடுகள் மாதிரி மோடி, அமித் ஷாவுக்கு இப்படி கட்டுப்பாடு விதிப்பீர்களா?

நாகப்பட்டினம் புத்தூரில் அண்ணா சிலை அருகே விஜய் பிரசாரம்
விஜய் - த.வெ.க (TVK)

ஏன் மக்களை சந்திக்க ஏன் தடை விதிக்கிறீர்கள்? இனி தடை விதித்தால் மக்களிடம் நேரடியாகச் சென்று அனுமதி கேட்பேன்.

பூச்சாண்டி வேலை வேண்டாம், தேர்தலில் மோதி பார்ப்போம். 2026 தேர்தலில் இருவருக்கு இடையேதான் போட்டி" என்று கூறி திருவாரூர் நோக்கிப் புறப்பட்டார்.

மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடைசி இரு தேர்தல்களாகப் போட்டியிட்ட திருவாரூர் தொகுதியில் தெற்கு வீதியில் தவெக தொண்டர்களிடத்தில் விஜய் பரப்புரையாற்றவிருக்கிறார்.

நாகையில் தமிழக வெற்றிக் கழகம் விஜய் : 7 தகவல்கள்

நாகப்பட்டினம் புறக்கணிப்பு – மீன் ஏற்றுமதியில் முன்னணியில் இருந்தாலும், தொழிற்சாலைகள், குடிநீர், வீடு, மெரைன் கல்லூரி போன்ற அடிப்படை தேவைகளை அரசு வழங்கவில்லை என குற்றச்சாட்டு.மீனவர்களின் உரிமைக்குரல் ... மேலும் பார்க்க

"திமுகவுக்கு கூடுவது கொள்கைக்கான கூட்டம்; மற்றவர்களுக்கு வருவது காக்கா கூட்டம்"- திமுக ஆர்.எஸ்.பாரதி

திருச்சியில் அரசியல் சுற்றுப் பயணத்தைத் தொடங்கி வார வாரம் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் மக்களைச் சந்திக்கவிருக்கிறார் தவெக தலைவர் விஜய். திருச்சி, அரியலூரில் அவரைக் காண வந்த கூட்டம் தமிழக அரசியலில... மேலும் பார்க்க

தமிழக வெற்றிக் கழகம் விஜய் : சனிக்கிழமை வர இதுதான் காரணம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் இன்று நாகப்பட்டினத்தில் ‘வெற்றி பேரணியில் தமிழ்நாடு நிகழ்வில்’ மக்களை சந்தித்தார்.அப்போது அவர் மீதான விமர்சனத்திற்கு பதில் அளித்தார்.அவர், “மக்களை சந்திக்கும் பயணத்திட்... மேலும் பார்க்க

TVK Vijay: `அடக்குமுறை, அராஜக அரசியல் எல்லாம் வேண்டாம் சார்’ - நாகையில் விஜய் காட்டம் | முழு உரை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நாகப்பட்டினம், திருவாரூரில் பரப்புரை செய்கிறார். தனது இரண்டாவது கட்ட தேர்தல் பிரசாரத்தை நாகையில் மேற்கொள்கிறார் விஜய்.அதில் விஜய் பேசியதாவது ”அண்ணா, பெரியார... மேலும் பார்க்க

israel palestine war: 'குண்டுமழை பொழியும் இஸ்ரேல்' - உயிர் பிழைக்க போராடும் மக்கள்; கண்ணீரில் காஸா!

போர் வெடித்ததற்கான பின்னணி!இரண்டாம் உலகப் போரின்போது சுமார் ஆறு மில்லியன் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்து உலகெங்கிலும் உள்ள யூதர்களுக்கு பாதுகாப்பான இடம் தேவை என்ற எண்ணம் தோன்றியது. முதல் ... மேலும் பார்க்க

தமிழக வெற்றிக் கழகம் விஜய் : உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்? | Vijay Full Speech

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் இன்று நாகப்பட்டினத்தில் ‘வெற்றி பேரணியில் தமிழ்நாடு நிகழ்வில்’ மக்களை சந்தித்தார்.அங்கு அவர் பேசியதின் முழுமையான எழுத்து வடிவம் இங்கே:விஜய், “அண்ணாவுக்கு வணக்கம்;பெரியா... மேலும் பார்க்க