H-1B Visa: 1 லட்சம் டாலராக விசா விலையை உயர்த்திய ட்ரம்ப்; இந்தியா, சீனாவிற்கு என...
தமிழக வெற்றிக் கழகம் விஜய் : சனிக்கிழமை வர இதுதான் காரணம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் இன்று நாகப்பட்டினத்தில் ‘வெற்றி பேரணியில் தமிழ்நாடு நிகழ்வில்’ மக்களை சந்தித்தார்.
அப்போது அவர் மீதான விமர்சனத்திற்கு பதில் அளித்தார்.
அவர், “மக்களை சந்திக்கும் பயணத்திட்டம் போடும்போது அது என்ன சனிக்கிழமை பயணம் என்ற விமர்சனம் வந்தது. உங்களை சந்திக்க வரும்போது உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது என்ற ஒரே காரணத்தினால் தான் வார இறுதி நாளா பார்த்து மக்கள் பயணத்தை திட்டமிட்டுள்ளோம்.” என்றார்






























மேலும் அவர், அரசியலில் சில பேருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் அல்லவா அதனால் தான் ஓய்வு நாளாக பார்த்து தேர்ந்தெடுத்தோம். என் மக்களை என் சொந்தங்களை சந்திப்பதில் எத்தனை கட்டுப்பாடுகள் அதற்கான காரணங்களைக் கேட்டால் சொத்தையான காரணங்களாக இருக்கும்.
அதைப் பேசக்கூடாது இதைப் பேசக்கூடாது என பல்வேறு காரணங்கள் கூறுகின்றனர்.” என்று அரசை விமர்சித்தார்.