தேர்தலுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்: பிரசாந்த் கிஷோர்
கருவலூரில் கட்டுமானப் பணியில் கட்டடம் இடிந்து இருவர் உயிரிழப்பு
அவிநாசி அருகே கருவலூர் உப்பிலிபாளையத்தில் கட்டுமானப் பணியின் போது கட்டடம் இடிந்து விழுந்ததில், இரு கட்டட தொழிலாளர்கள் சனிக்கிழமை உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், கருவலூர் அருகே உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு சொந்தமான இடத்தில் கோழிபண்னை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை காலை வழக்கம் போல, கட்டடத் தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்!
சனிக்கிழமை மாலை, கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது 10 அடிக்கும் மேல் அமைக்கப்பட்ட சுவர் திடிரென இடிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த, திண்டுக்கல் கொடை ரோடு பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் ரமேஷ்(46), அவிநாசி அருகே சுண்டக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி(55) ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும், பலத்த காயமடைந்த கருவலூர் மேற்கு வீதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ்(42), கோவை மாவட்டம், சூலூரைச் சேர்ந்த முத்தாள் ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்துக் குறித்து அவிநாசி போலீஸார் விசாரிக்கின்றனர்.