Anupama: ``இறப்பதற்கு முன் நண்பர் அனுப்பிய அந்த மெசேஜ்; என் மனதின் ஆறாத காயம்" -...
தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
நாகை மாவட்ட சமூகநலத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நாகை மாவட்டத்தில் சமூக நலத்துறை மூலம் செயல்பட்டு வரும் மிஷன் சக்தி திட்டம் - மாவட்ட மகளிா் அதிகார மையம், மகளிருக்கான மத்திய மாநில அனைத்து திட்டங்களின் செயல்பாடு-நிதி ஒதுக்கீடு மற்றும் அவற்றின் பயன்களை கண்காணிக்கவும், ஒருங்கிணைந்து சேவையாற்றவும் இச்சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப உதவியாளா் ஒரு காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணிக்கு தேர்வு செய்யப்படுபவருக்கு மாதம் ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்புவோா் nagapattinam.nic.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து செப்.29-ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பத்தை அளித்து பயன்பெறலாம்.