ஜிஎஸ்டி எதிரொலி: பால் உள்ளிட்ட பொருட்களின் விலையை குறைத்த அமுல் நிர்வாகம்!
வெளியானது தனுஷின் இட்லி கடை பட டிரைலர்!
நடிகர் தனுஷ் நடித்துள்ள இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் அவரே இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. இப்படத்தில், நடிகர் அருண் விஜய், நடிகை நித்யா மெனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இது ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. படத்தை அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது.
இதற்கான இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. படத்தில் முருகன் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ளதாக அறிமுக போஸ்டரை வெளியிட்டு அண்மையில் அறிவித்தனர்.
இசை வெளியீட்டு விழா ஏற்கெனவே நடந்து முடிந்த நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.