செய்திகள் :

அசுரனுடன் கைகோர்க்கும் லப்பர் பந்து இயக்குநர்! தனுஷின் புதிய பட அப்டேட்!

post image

நடிகர் தனுஷுடன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பினை லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து வெளியிட்டுள்ளார்.

லப்பர் பந்து படம் வெளியாகி ஓராண்டு நிறைவான நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பினை இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்த எக்ஸ் பதிவில் அவர் தெரிவித்ததாவது,

லப்பர் பந்து வெளியாகி, என்னை ஊக்கமளித்த இந்த நாளில், ஊருக்கே தெரிந்த அந்த அப்டேட்டை நானும் சொன்னல்தான் உங்களுக்கும் அந்த நாளுக்கும் நான் செய்கிற நன்றியாக இருக்கும்! என்னுடைய அடுத்த படம் தனுஷ் சார்கூட தான்.

தனுஷுக்கு ரொம்ப நன்றி. கதை சொல்லும்போது என் பதற்றத்தை பொறுத்துக் கொண்டதற்கு’’ என்று கூறியுள்ளார்.

இருப்பினும், தனுஷுடனான தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை தமிழரசன் பச்சமுத்து முன்னரே தெரிவித்திருந்தார்.

செப்டம்பர் 14 ஆம் தேதியில் நடைபெற்ற இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழரசன் பச்சமுத்து,

"என்னுடைய அடுத்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு இடம் பார்க்கத்தான் இங்கு வந்தேன். தனுஷின் அடுத்த படத்தை நான்கூட இயக்கலாம்.

இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கலாம். இவை அனைத்தும் வதந்தியாக கூட இருக்கலாம்" என்று சூசகமாகத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க:அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷின் தீயவர் குலை நடுங்க டீசர்!

புரட்டாசி சனிக்கிழமை: காஞ்சிபுரம் ஆன்மிக சுற்றுலா திட்டம் தொடக்கம்!

புரட்டாசி மாதத்தினையொட்டி காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மண்டலம் சார்பில் 50 பக்தர்களை வைணவ ஆன்மிக தல சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும் நிகழ்வினை மேயர் மகாலட்சுமி யுவராஜ் துவக்கி வைத்த... மேலும் பார்க்க

அரையிறுதியில் சாத்விக்/சிராக் இணை: சிந்து மீண்டும் சறுக்கினார்

சீனா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை, அரையிறுதிச் சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது. நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதியில் தோல்வ... மேலும் பார்க்க

நபோ​லியை வீ‌ழ்‌த்​தி​யது மா‌ன்​செஸ்​ட‌ர் சி‌ட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், மான்செஸ்டர் சிட்டி 2-0 கோல் கணக்கில் நபோலியை வெள்ளிக்கிழமை சாய்த்தது. அந்த அணிக்காக எர்லிங் ஹால்ந்த் 56-ஆவது நிமிஷத்திலும், ஜெரிமி டோகு 65-ஆவது நிமிஷத்திலும் கோல... மேலும் பார்க்க

ஓமனை போராடி வென்றது இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில், இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் ஓமனை வெள்ளிக்கிழமை வென்றது. இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் ச... மேலும் பார்க்க

ஹரியாணாவுக்கு 5-ஆவது வெற்றி

புரோ கபடி லீக் போட்டியின் 41-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஹரியாணா ஸ்டீலா்ஸ் 34-30 புள்ளிகள் கணக்கில் புணேரி பால்டனை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் ஹரியாணா அணி 21 ரெய்டு, 8 டேக்கிள், 2... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதிகளை மீறியது: ஐசிசி குற்றச்சாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான ஆட்டத்துக்கு முன்பான நிகழ்வுகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதிகளை மீறிச் செயல்பட்டதாக ஐசிசி குற்றம்சாட்டியுள்ளது. இது... மேலும் பார்க்க