Anupama: ``இறப்பதற்கு முன் நண்பர் அனுப்பிய அந்த மெசேஜ்; என் மனதின் ஆறாத காயம்" -...
எல்ஐசி வீட்டுவசதி நிதி நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி!
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி வீட்டுவசதி நிதி நிறுவனத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி: Graduate Apprenticeship
மொத்த காலியிடங்கள்: 192
உதவித்தொகை: மாதம் ரூ.12,000
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 20 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்கள், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
விண்ணப்பதாரரின் வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி ஆகியவை 1.9-2025 தேதியின்படி கணக்கிடப்படும். 1.9.2021 தேதிக்கு முன்னர் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடங்கள் மற்றும் தேர்வு மையம் குறித்த விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
ஆன்லைன் முறையில் நடை பெறும் எழுத்துத்தேர்வில் வங்கி, முதலீடு, காப்பீடு, பகுத்தறிவு, டிஜிட்டல், கணினி கல்வியறிவு பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
நேர்முகத்தேர்வின் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு ரூ.708, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.472, பிற அனைத்து பிரிவினரும் ரூ.944 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் முதலில் தங்களது கல்வித்தகுதி பற்றிய விவரங்களை www.nats.educa tion.gov.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் www.lichousing.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் .
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.9.2025
மாநில வாரியாக ஏற்பட்டுள்ள காலியிட விபரம், காலியிடப் பகிர்வு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட் டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
எழுத்துத்தேர்வு 1.10.2025 அன்று நடைபெறும்.
பயிற்சி 1.11. 2025 முதல் ஆரம்பமாகும்.