மிஸ்பண்ணிடாதீங்க... இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை!
மத்திய அரசு நிறுவனமான இந்திய விமான நிலைய ஆணையத்தில்(ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா) நிரப்பப்பட உள்ள 976 இளநிலை அலுவலர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: 09/2025/CHQ
பணி: Junior Executives
காலியிடங்கள்: 976
துறைவாரியான காலியிடங்கள்:
1. Architecture - 11
2. Civil - 199
3. Electrical - 208
4. Electronics - 572
5. Information Technology - 31
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
வயதுவரம்பு: 27.9.2025 தேதியின்படி 27-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐடி ஆகிய பிரிவுகள் அல்லது அதற்கு இணையான ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் பிஇ அல்லது பி.டெக், கட்டடக்கலை பிரிவில் பி.ஆர்க், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் எம்சிஏ முடித்திருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் கேட் -2023 அல்லது கேட் 2024-25 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு, மருத்துவத்தகுதித் தேர்வு ஆகியவற்றிற்கு அழைக்கப்படுவர். அதன் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் மின்னஞ்சல் முகவரிக்குஅனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள், ஏர்போர்ட் அத்தாரிட்டி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். இதர அனைத்து பிரிவினரும் ரூ.300 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.aai.aero இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.9.2025
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம், தேதி பற்றிய விபரங்கள் மேற்கண்ட இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும்.
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.