செய்திகள் :

எச்-1பி விசா கட்டண உயர்வால் இந்திய குடும்பங்களுக்கு பாதிப்பு: வெளியுறவு அமைச்சகம்

post image

அமெரிக்காவில் எச்-1பி விசா கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு வெளியுறவு அமைச்சகம் எதிர்வினையாற்றியுள்ளது.

இது குறித்து, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அமெரிக்க எச்-1பி விசா திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள கட்டுப்பாட்டு நெறிமுறைகளைத் தொடர்ந்து, இதனால் முழுமையாக ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். இந்தியா மற்றும் அமெரிக்காவிலுள்ள துறைகள் பல, புத்தாக்கம் மற்றும் புதுமையில் பங்குள்ள நிலையில், அவர்களுடனும் கலந்தாலோசிக்கப்படும்.

திறன் வாய்ந்த தரப்பினர் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் தொழில்நுட்ப மேம்பாடு, புத்தாக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகிய பலவற்றுக்கு மிகப்பெரியளவில் பங்களிப்பு நல்கியுள்ளனர்.

இந்த நிலையில், கொள்கை வகுப்பாளர்கள், இரு நாடுகளிலும் உள்ள மக்களுக்கிடையிலான வலுவான உறவுகளை உள்ளடக்கிய பரஸ்பர பலனளிக்கும் நலன்களையும் கருத்திற்கொண்டு, அண்மையில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பகுப்பாய்வு செய்துகொள்ள வேண்டும்.

இந்த நடவடிக்கையானது, மனிதாபிமான அடிப்படையில் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதிலும் குறிப்பாக, குடும்பங்கள் பலவற்றுக்கு ஏற்படுத்தியுள்ள சிதைவால் பின்விளைவுகள் ஏற்படும்.

இந்த நிலையில், இவையனைத்தும் அமெரிக்க அதிகாரிகளால் பொருத்தமாக கையாளப்படும் என்று அரசு நம்பிக்கையுடன் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Statement by the Official Spokesperson regarding restrictions to the US H1B visa program

தாதே சாகேப் பால்கே விருது! மோகன்லாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட நடிகர் மோகன்லாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில்,``திறமை மற்றும் நடிப்பில் பன்முகத் தன்மையின் ஓர் அடையாள... மேலும் பார்க்க

தேர்தலுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்: பிரசாந்த் கிஷோர்

தேர்தலுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று ஜன்சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.பிகாரில் ஜன்சுராஜ் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் ப... மேலும் பார்க்க

திரிம்பகேஷ்வரில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்

திரிம்பகேஷ்வரில் 3 பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், திரிம்பகேஷ்வரில் கும்பமேளா தொடர்பான துறவிகளின் கூட்டத்தை செய்தி சேகரிப்பதற்காக ச... மேலும் பார்க்க

லக்னௌவில் ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் கைது

லக்னௌவில் ஷாப்பிங் மாலில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம், சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் நிலையப் பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலில் செப்டம்ப... மேலும் பார்க்க

கேரளத்தில் தென்னை மரம் விழுந்ததில் 2 பெண் தொழிலாளர்கள் பலி

கேரளத்தில் தென்னை மரம் வேரோடு பெயர்ந்து விழுந்ததில் 2 பெண் தொழிலாளர்கள் பலியாகினர். கேரள மாநிலம், நெய்யாட்டின்கராவில் உள்ள குன்னத்துகலில் தென்னை மரம் வேரோடு பெயர்ந்து இரண்டு பெண் தொழிலாளர்கள் மீது சனி... மேலும் பார்க்க

அமெரிக்கா செல்வதற்கான விமான கட்டணம் அதிரடியாக உயர்வு?

எச்-1பி விசாவுக்கு இனிமேல் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபரின் அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்கா செல்வதற்கான விமான கட்டணம் அதிரடியாக உயர்ந்திருப்பதாக அமெரிக்காவில் பணியாற்றும் ஊழியர... மேலும் பார்க்க