கேரளத்தில் தென்னை மரம் விழுந்ததில் 2 பெண் தொழிலாளர்கள் பலி
கேரளத்தில் தென்னை மரம் வேரோடு பெயர்ந்து விழுந்ததில் 2 பெண் தொழிலாளர்கள் பலியாகினர்.
கேரள மாநிலம், நெய்யாட்டின்கராவில் உள்ள குன்னத்துகலில் தென்னை மரம் வேரோடு பெயர்ந்து இரண்டு பெண் தொழிலாளர்கள் மீது சனிக்கிழமை விழுந்தது.
இந்த சம்பவத்தில் அவர்கள் இருவரும் பலியானதாக போலீஸார் தெரிவித்தனர்.
பலியானவர்கள் வசந்தா (65) மற்றும் சந்திரிகா (64) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தினசரி கூலி வேலை செய்பவர்கள்.
கிராமத்தில் வேலை நேரத்தில் மதிய உணவுக்குப் பிறகு பெண்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
அமெரிக்கா செல்வதற்கான விமான கட்டணம் அதிரடியாக உயர்வு?
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், வேரோடு சாய்ந்த மரம் திடீரென அவர்கள் மீது விழுந்தது. காயங்களுடன் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை.
இந்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு தெரிவித்தனர்.