செய்திகள் :

"ஒப்பற்ற கலை வாழ்க்கைக்கு இது தகுதியான அங்கீகாரம்"- மோகன்லாலுக்கு வாழ்த்து தெரிவித்த பினராயி விஜயன்

post image

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது மத்திய அரசு. 2023-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது மோகன்லாலுக்கு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி வழங்கப்பட உள்ளது. அன்று நடைபெறும் 71 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் மோகன்லாலுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. மோகன்லாலின் சினிமா பயணம் தலைமுறைகளுக்கு ஊக்கமளிப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் பாராட்டியுள்ளது.  மலையாள சினிமாவை பொறுத்தமட்டில் ஏற்கனவே அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு 2004-ல் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவில் பாபா சாகேப் பால்கே விருதுபெறும் இரண்டாவது நபர் மோகன்லால் ஆவர். பாபா சாகேப் விருதுபெறும் நடிகர் மோகன்லாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். "மலையாள சினிமாக்களிலும் நாடகங்களிலும் பல தசாப்தங்களாக தீவிரமாக ஈடுபட்டுள்ளார் மோகன்லால். மலையாள சினிமாவை வழி நடத்தும் ஒளி அவர்தான். தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி சினிமாக்களிலும் மோகன்லால் கவனம் ஈர்க்கும் வகையில் நடித்துள்ளார். பாபா சாகேப் பால்கே விருது பெற்ற மோகன்லாலுக்கு வாழ்த்துகள். அவரது சாதனைகள் வருங்கால தலைமுறையினருக்கு ஊக்கம் அளிக்கட்டும்" என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பற்றி பினராயி விஜயன் கூறுகையில்,"சினிமா துறைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்கு நாடு வழங்கும் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெற்றதற்கு அன்பிற்குரிய மோகன் லாலுக்கு வாழ்த்துகள். இது மலையாள திரை உலகிற்கு மட்டுமல்ல நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் சாதனையாகும். அவரது ஒப்பற்ற கலை வாழ்க்கைக்கு இது ஒரு தகுதியான அங்கீகாரம் ஆகும். அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

பிரதமர் மோடியுடன் மோகன்லால்

இதுபற்றி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேரள மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூறுகையில், "மலையாளத்தின் பெருமைமிகு மோகன்லாலுக்கு இந்திய சினிமா துறையில் மிக உயரிய வெகுமதியாக இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது. இயல்பான மற்றும் தனித்துவமான நடிப்பு மூலம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாள மக்களையும், இந்த உலகத்தையும் வியப்பில் ஆழ்த்திய நடிகர் அவர். தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்த நடிகர் மோகன்லால் தாதா சாகேப் பால்கே விருது பெறுவது ஒவ்வொரு மலையாள மக்களுக்கும் கிடைக்கும் அங்கீகாரம் ஆகும். வயதுகளை கடந்து, நாடுகளை கடந்து அனைவரின் லாலேட்டனான அன்பான மோகன்லாலுக்கு வாழ்த்துக்கள்" என்றார்.

Mohanlal: நடிகர் மோகன்லாலுக்கு `தாதாசாகேப் பால்கே விருது' மத்திய அரசு அறிவிப்பு!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு, தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.மலையாளத் திரையுலகின் தவிர்க்கமுடியாத நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் மோகன்லால். லாலேட்ட... மேலும் பார்க்க

Anupama parameswaran: `அழகே அழகே பேரழகே' - அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | Photo Album

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொ... மேலும் பார்க்க

Lokah: ``லோகா வெற்றிக்குப் பிறகு இந்த அபாயம் இருக்கிறது!'' - ஜீத்து ஜோசப் சொல்வதென்ன?

இந்தப் படத்திற்கான புரோமோஷன் நிகழ்வுகளில் இயக்குநர் ஜீத்து ஜோசஃப் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அவர் பகிரும் விஷயங்கள் பலவும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.Mirage Movie அப்படி ஒர... மேலும் பார்க்க

Lokah: ``நஷ்டம் ஏற்படும் என நினைத்தோம்!'' - துல்கர் சல்மான்

இயக்குநர் டாமினிக் அருண் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹீரோ திரைப்படமான `லோகா' நாடெங்கும் அதிரடி வசூல் புரிந்தது. சூப்பர் ஹீரோவாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க, சாண்டி, நஸ்லென் ஆகியோரும் படத்தின் முக்கியக... மேலும் பார்க்க