அதிமுகவுக்கு அமித்ஷா வீடுதான் நீதிமன்றம்: உ.வாசுகி விமரிசனம்
ஜிஎஸ்டி எதிரொலி: பால் உள்ளிட்ட பொருட்களின் விலையை குறைத்த அமுல் நிர்வாகம்!
புதுதில்லி: நாட்டின் மிகவும் பிரபலமான பால் பிராண்டுகளில் ஒன்றான 'அமுல்' பிராண்டின் கீழ் பால் பொருட்களை சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு நெய், வெண்ணெய் ஐஸ்கிரீம், பேக்கரி மற்றும் உறைந்த சிற்றுண்டிகள் உள்பட 700க்கும் மேற்பட்ட பொருட்களின் சில்லறை விலையைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. அதே வேளையில் முழு ஜிஎஸ்டி குறைப்பின் பலன்களை நுகர்வோருக்கு வழங்கவும் முடிவு செய்துள்ளது.
புதிய விலை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் என்ற நிலையில், குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு தனது அறிக்கையில், 700க்கும் மேற்பட்ட தயாரிப்பு பொருட்களின் விலைப் பட்டியலில் திருத்தம் செய்துள்ளது.
இந்தத் திருத்தம் வெண்ணெய், நெய், யு.எச்.டி. பால், ஐஸ்கிரீம், சீஸ், பனீர், சாக்லேட்டுகள், பேக்கரி வகைகள், உறைந்த பால் மற்றும் உருளைக்கிழங்கு சிற்றுண்டிகள், வேர்க்கடலை ஸ்ப்ரெட், மால்ட் சார்ந்த பானம் ஆகிய தயாரிப்பு வகைகளில் இதில் அடங்கும் என்று குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வெண்ணெய் (100 கிராம்) விலை ரூ.62ல் இருந்து ரூ.58 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் நெய் விலை லிட்டருக்கு ரூ.40 குறைந்து ரூ.610 ஆக உள்ளது.
அமுல் சீஸ் (1 கிலோ) அதிகபட்ச சில்லறை விற்பனை விலையானது கிலோ ஒன்றுக்கு ரூ.30 குறைக்கப்பட்டு இனி ரூ.545 ஆக உள்ளது.
உறைந்த பனீர் (200 கிராம்) அதிகபட்ச சில்லறை விற்பனை விலை செப்டம்பர் 22 முதல் ரூ.95 ஆக இருக்கும். தற்போது அது ரூ.99 ஆக உள்ளது.
36 லட்சம் விவசாயிகளுக்குச் சொந்தமான குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் விலைக் குறைப்பானது, அதன் பால் பொருட்களுக்கான தேவையை அதிகரிக்கும் வேளையில், அதன் வருவாய் உயர்வுக்கு வழிவகுக்கும் என்றது.
இதையும் படிக்க: மும்பையில் ரூ.500 கோடிக்கு நிலம் வாங்கிய எஸ்.டி.டி குளோபல் டேட்டா நிறுவனம்!