செய்திகள் :

வோடபோன் ஐடியா பங்குகள் 7% உயர்வு!

post image

புதுதில்லி: நிறுவனத்தின் 2016-17 வரையிலான காலத்திற்கான கூடுதல் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் கோரிக்கையை ரத்து செய்யக் கோரிய தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மனுவை செப்டம்பர் 26 ஆம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டதை அடுத்து, வோடபோன் ஐடியா லிமிடெட்டின் பங்குகள் 7% மேலாக உயர்ந்து முடிவடைந்தன.

பிஎஸ்இ-யில் காலை நேர வர்த்தகத்தில் 12.35 சதவிகிதம் உயர்ந்து ரூ.8.82 ஆக இருந்தது. வர்த்தக முடிவில் 7.13 சதவிகிதம் உயர்ந்து ரூ.8.41 ஆக முடிவடைந்தது.

என்எஸ்இ-யில் 7.14 சதவிகிதம் உயர்ந்து ரூ.8.40 ஆக முடிவடைந்தது.

2016-17 நிதியாண்டுடன் தொடர்புடைய தொலைத்தொடர்புத் துறை ரூ.5,606 கோடி கோரிக்கைக்கு எதிராக வோடபோன் தாக்கல் செய்த புதிய மனுவை தலைமை நீதிபதி கவாய், நீதிபதிகளான வினோத் சந்திரன் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

2019 ஆம் ஆண்டு ஏஜிஆர் தீர்ப்பின் மூலம் நிலுவைத் தொகைகள் ஏற்கனவே தெளிவாக தெரிவித்துள்ள நிலையில் அதை மீண்டும் திறக்க முடியாது என்றது வோடபோன்.

இதையும் படிக்க: பிளிப்கார்ட்டில் விற்பணைக்கு வரும் ராயல் என்ஃபீல்ட்!

பிளிப்கார்ட்டில் விற்பணைக்கு வரும் ராயல் என்ஃபீல்ட்!

புதுதில்லி: மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்ட், ஃபிளிப்கார்ட்டுடன் இணைந்து அதன் 350 சிசி போர்ட்ஃபோலியோவை விற்பனை செய்ய உள்ளதாக இன்று தெரிவித்தது. புல்லட் 350, கிளாசிக் 350, ஹண்டர் 350, க... மேலும் பார்க்க

சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 1.07% ஆக உயர்வு!

புதுதில்லி: விவசாயம் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான சில்லறை பணவீக்கம் ஜூலை மாதம் முறையே 0.77 மற்றும் 1.01 சதவிகிதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் 1.07 மற்றும் 1.26 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக தொழிலாள... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.88.11ஆக நிறைவு!

மும்பை: அமெரிக்க-இந்தியா வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்த நம்பிக்கையின் அடிப்படையில், இன்றைய அந்நிய செலவாணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.88.11 ... மேலும் பார்க்க

மூன்று நாள் உயர்வுக்கு பிறகு, இந்திய பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!

மும்பை: ப்ளூ-சிப் நிறுவனங்களான எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் பங்குகளை முதலீட்டாளர்கள் லாப முன்பதிவை செய்ததையடுத்து பெஞ்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் இன்று 387 புள்ளிகள் சரிந்து, அதன் மூன... மேலும் பார்க்க

வாய்மையே வெல்லும்! ஜெய் ஹிந்த்!:செபி அறிவிப்புக்குப் பின் அதானி பதிவு

புது தில்லி: முழுமையான விசாரணைக்குப் பிறகு, ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நாங்கள் எப்போதும் கூறி வந்ததை செபி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்று அதானி குழும தலைவர் கௌதம் அதானி தெரிவி... மேலும் பார்க்க

செபியில் அறிவிப்பால் உயர்வுடன் வர்த்தகமாகும் அதானி குழும பங்குகள்!

ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டு தவறானவை என்று செபி அறிவித்திருக்கும் நிலையில், அதானி குழுமத்தின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றது.இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியவுடன் அதானி குழுமத... மேலும் பார்க்க