பெரிய சவால்களை எதிர்கொள்ள ஆப்கானிஸ்தான் தயார்: ஆப்கன் பயிற்சியாளர்
Lokah: ``லோகா வெற்றிக்குப் பிறகு இந்த அபாயம் இருக்கிறது!'' - ஜீத்து ஜோசப் சொல்வதென்ன?
இந்தப் படத்திற்கான புரோமோஷன் நிகழ்வுகளில் இயக்குநர் ஜீத்து ஜோசஃப் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அவர் பகிரும் விஷயங்கள் பலவும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அப்படி ஒரு புரோமோஷன் நிகழ்வில் ஒரு படத்தின் வெற்றி பார்முலாவை அடுத்தடுத்து வெற்றிகளைக் கொடுக்கப் பின்பற்றுவார்கள் என சமீபத்தில் வெளிவந்த `லோகா' படத்தை உதாரணமாக வைத்துச் சொல்லியிருக்கிறார்.
அவர், வெவ்வேறு வகைகளில் திரைப்படங்கள் இருக்க வேண்டும். பொதுவாக நடப்பது என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட வகையில் ஒரு படம் சூப்பர் ஹிட் ஆகும்போது, எல்லோரும் அதே வகையை உருவாக்கத் தொடங்கிவிடுவார்கள்.
'லோகா' வெற்றியைத் தொடர்ந்து, இப்போது எல்லோரும் சூப்பர் ஹீரோ படங்களை உருவாக்கத் தொடங்குவார்கள் என்ற அபாயம் உருவாகியிருக்கிறது.

அது சரியான விஷயம் இல்லை." என்றவரிடம் வுமன் சென்ட்ரிக் திரைப்படங்கள் பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் தந்த அவர், ``சினிமாவில் இப்படியான வகைப்பாடு இருக்கக் கூடாது. ஒரு நடிகர், ஆணோ, பெண்ணோ, ஒரு கதாபாத்திரத்தை நன்றாகச் செய்து, பார்வையாளர்களுடன் கனெக்ஷன் ஏற்படுத்தினால், அது வெற்றி பெறும்.
இது முன்பே நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்திலும் இது தொடரும். 'லோகா' படத்திலும் அதுதான் நடந்திருக்கிறது." எனக் கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...