IND vs PAK: "அவ்வாறு சட்டம் ஒன்றும் இல்லை" - இந்திய வீரர்களின் செயலை நியாயப்படுத...
குடியரசுத் தலைவர் முர்முவுடன் மோரீஷஸ் பிரதமர் சந்திப்பு!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மோரீஷஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் சந்தித்துப் பேசினார்.
முன்னதாக குடியரசுத் துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனையும் மோரீஷஸ் பிரதமர் சந்தித்தார்.
குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து அவரை சந்தித்த முதல் வெளிநாட்டுத் தலைவர் இவர் ஆவார்.
இருதரப்பு சந்திப்பு குறித்து குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
இந்தியாவிற்கும் மோரீஷஸுக்கும் இடையிலான வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதங்கள் நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளது.
இதனிடையே 8 நாள் அரசுமுறைப் பயணமாக மோரீஷஸ் பிரதமர் ராம்கூலம் இந்தியா வந்தாா். பிரதமா் நரேந்திர மோடியை வாரணாசியில் சந்தித்து அவா் ஆலோசனை நடத்தினாா். அப்போது வா்த்தகம், முதலீடு, கல்வி, அறிவியல், ஆராய்ச்சி, மின்உற்பத்தி, உள்கட்டமைப்பு, நீலப் பொருளாதாரம், எண்ம உள்கட்டமைப்பு உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் பிராந்திய-உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் விரிவான விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
பிரதமர் ராம்கூலத்தின் இந்திய பயணத்தின் இறுதிக் கட்டத்தின் ஒரு பகுதியாக இன்று காலை தேசிய தலைநகரில் உள்ள ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு அவர் அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.