செய்திகள் :

பிரதமரின் பிறந்தநாளில் 500 குழந்தைகள் காப்பகங்கள் தொடங்கப்படும்: தில்லி முதல்வர்!

post image

பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு தொழிலாளர்களாக பணிபுரியும் பெண்களின் குழந்தைகளுக்காக 500 காப்பகங்கள் தில்லி அரசு தொடங்கும் என்று முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.

தில்லி செயலகத்தில் விஸ்வகர்மா பூசை செய்த பிறகு, நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களித்தற்காகத் தொழிலாளர்களை முதல்வர் பாராட்டினார். தொழிலாளர்களின் கடின உழைப்பு இல்லாமல் எந்த மாநிலத்தின் வளர்ச்சியும் சாத்தியமில்லை என்றார்.

தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, ஏழைகளுக்குப் பயனளிக்கும் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டம், ஆரோக்கிய மந்திர் மருத்துவமனைகள் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை பாஜக அரசு தொடங்கியுள்ளது.

இதனிடையே பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு "பால்னா" என்ற பெயரில் 500 குழந்தைகள் காப்பகங்களை தொடங்க உள்ளோம். பெண் தொழிலாளர்கள் பணியில் இருக்கும்போது அவர்களின் குழந்தைகள் அங்குக் கவனித்துக் கொள்ளப்படுவார்கள்.

தில்லி தொழிலாளர்களுக்குச் சொந்தமானது, அரசு அவர்களுக்கு எப்போதும் துணை நிற்கும் என்று முதல்வர் கூறினார்.

செப்டம்பர் 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, அன்றைய தினம் ஒடிசாவில் 75 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Delhi government will launch 500 creches for children of women working as labourers in the city on the occasion of Prime Minister Narendra Modi's 75th birthday on September 17, Chief Minister Rekha Gupta said on Tuesday.

இதையும் படிக்க: ஹாலிவுட் தொடரில் நடிக்கும் சித்தார்த்!

பிரதமர் மோடியின் பிறந்தநாள் ஒரு கருப்பு நாள்: காங்கிரஸ் எம்பி விமர்சனம்!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு கருப்பு நாள் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் பிரணிதி ஷிண்டே கடுமையாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உடனான சந்த... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவருடன் மோரீஷஸ் பிரதமர் சந்திப்பு!

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை மோரீஷஸ் நாட்டின் பிரதமர் நவீன் ராம்கூலம் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். கிழக்கு ஆப்பிரிக்க நாடான மோரீஷஸின் பிரதமர் நவீன் ராம்கூலம், கடந்த செப்.9 ஆம் தேதி... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முர்முவுடன் மோரீஷஸ் பிரதமர் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மோரீஷஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் சந்தித்துப் பேசினார். முன்னதாக குடியரசுத் துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனையும் மோரீஷஸ் பிரதமர் சந்தித்தார். குடியரசுத் துணைத் த... மேலும் பார்க்க

12% ஜிஎஸ்டியால் கடந்த 8 ஆண்டுகளாக மக்களைச் சுரண்டிய பாஜக அரசு! - ப. சிதம்பரம்

கடந்த 8 ஆண்டுகளாக 5% ஜிஎஸ்டி ஏன் நியாயமானதாக இல்லை என்றும் 12% வரி விதிப்பின் மூலமாக 8 ஆண்டுகளாக மக்களை பாஜக அரசு சுரண்டியுள்ளதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். கடந்த செப். 3 ஆம... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் சரண்!

சத்தீஸ்கரில், ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் ஒருவர், பாதுகாப்புப் படையினரிடம் இன்று (செப்.16) சரணடைந்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில், தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்பில் கடந்த 2005 ... மேலும் பார்க்க

பிரதமரின் பிறந்தநாளில் 75 லட்சம் மரக்கன்றுகள் நட ஒடிசா அரசுத் திட்டம்!

பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு 75 லட்சம் மரக்கன்றுகளை நட ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தத் திட்டம் தேர்தல் முறையில் செயல்படுத்தப்படும் என வனத்துற... மேலும் பார்க்க