ஆயுத பூஜை, தீபாவளி சிறப்பு ரயில்கள்: நாளை முன்பதிவு தொடக்கம்!
பண்டிகைக் கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை(செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவை நாளை காலை 8 மணி முதல் பயணிகள் செய்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் செப். 28 முதல் அக். 26 வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படும். எதிர் வழித்தடத்தில் இந்த சிறப்பு ரயில், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு செப்.29- அக். 27 வரை திங்கள்கிழமைகளில் இயக்கப்படும்.
சென்னை - போத்தனூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் செப். 25 முதல் அக். 23 வரை வியாழக்கிழமைகளில் இயக்கப்படும். எதிர் வழித்தடத்தில் போத்தனூரிலிருந்து சென்னைக்கு செப். 26 முதல் அக். 24 வரை வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
நாகர்கோவிலில் இருந்து சேலம், காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் செப்.30 முதல் அக்.28 வரை செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும். எதிர் வழித்தடத்தில் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே அக்.1 முதல் அக்.29 வரை புதன்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
தூத்துக்குடி- எழும்பூர் சிறப்பு ரயில் செப். 23 முதல் அக். 23 வரை அனைத்து திங்கள்கிழமைகளிலும்இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.
மேலும், நெல்லை - எழும்பூர், எழும்பூர் - நெல்லை வந்தே பாரத் ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கை 16-ல் இருந்து 20-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 312 இடங்கள் கூடுதலாக பயணிகளுக்கு கிடைக்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்?