எதிர்நீச்சலை பின்னுக்குத்தள்ளிய சிறகடிக்க ஆசை! டிஆர்பி பட்டியல் வெளியீடு!
தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெக தலைவர் விஜய், திருச்சியில் செப். 13 ஆம் தேதி தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில் டிசம்பர் இறுதி வரை அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்த சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் விஜயின் தேர்தல் பிரசார சுற்றுப்பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது அவர் ஒரு நாளில் 3 மாவட்டங்களுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது அது 2 மாவட்டமாக மாற்றப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சியில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மக்கள் அதிகம் கூடியதால் திட்டமிட்டபடி அவர் பிரசாரத்தை மேற்கொள்ள முடியாமல் போனது. இதனாலே அவரது சுற்றுப் பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிகிறது.
விஜய்யின் தேர்தல் பிரசார பயணம் குறித்த புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.